பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் பங்கேற்று நான்கு வெற்றி மற்றும் ஐந்து தோல்வி என 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தினை பிடித்து இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளோடு வெளியேறியது. இந்த உலகக்கோப்பை தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னால் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணி பார்க்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் அணி இப்படி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெளியேறியுள்ளது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியுடன் ஆரம்பித்த அந்த அணி அதன் பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்தது.
இப்படி பாகிஸ்தான அணி தோல்வியை சந்தித்து இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளோடு வெளியேறியது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் பாகிஸ்தான் அணி இப்படி சொதப்ப என்ன காரணம்? என்பது குறித்த தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தற்போது மிகவும் மென்மையான வீரர்களாக மாறிவிட்டார்கள்.
முன்பெல்லாம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு களத்தில் அனல் பறக்கும் செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தற்போது உள்ள அணியில் பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் போன்றவர்கள் எல்லாம் அந்த நிலையை மாற்றி விட்டார்கள். அவர்கள் மிகவுமே நட்பான வீரர்களாக சாதாரண கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறார்கள்.
இதையும் படிங்க : இந்தியா ஸ்ட்ராங்கான டீமா இருந்தாலும்.. நாங்க அந்த கோல் அடிப்போம்.. டேவோன் கான்வே பேட்டி
அதுவே அந்த அணியின் சொதப்பலுக்கு காரணம் என்று பதிவிட்டுள்ளார். முகமது கைஃப் குறிப்பிடுவது போலவே இந்த உலகக் கோப்பை தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் தங்களது திறனை வெளிக்காட்டவில்லை என்பதே உண்மை.