இந்தியா ஸ்ட்ராங்கான டீமா இருந்தாலும்.. நாங்க அந்த கோல் அடிப்போம்.. டேவோன் கான்வே பேட்டி

Devon Conway
- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 45 லீக் போட்டிகளின் முடிவில் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்ட இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

பொதுவாகவே கடந்த 2013க்குப்பின் இந்தியா நாக் அவுட் சுற்றில் பெரும்பாலும் தோல்விகளை சந்தித்து வருவதை அனைவரும் அறிவோம். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை விளையாடிய 3 ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் இந்தியா தோல்விகளையே சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்திடம் தோனி – ஜடேஜா போராட்டத்தை தாண்டி இந்தியா தோட்டத்தை ரசிகர்களால் மறக்க முடியாது

- Advertisement -

கோல் அடிப்போம்:
அதனால் கவலையடைந்துள்ள ரசிகர்கள் இதே தொடரில் 20 வருடங்கள் கழித்து ஐசிசி முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்த ஆட்டத்தை மீண்டும் செமி ஃபைனலில் இந்தியா நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சொந்த மண்ணில் அச்சுறுத்தலை கொடுக்கும் வலுவான இந்தியாவை சமாளித்து வெற்றி பெறும் அளவுக்கு தங்களுடைய அணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் நிறைந்திருப்பதாக இங்கிலாந்து வீரர் டேவோன் கான்வே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனவே ஃபைனல் செல்ல வேண்டும் என்ற கோலை (இலக்கை) கண்டிப்பாக இந்தியாவுக்கு எதிராக செமி ஃபைனலில் அடிப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது மிகவும் வலுவான அணியாக திகழும் அவர்கள் வெற்றி பாதையில் நடந்து வருகின்றனர். ஆனால் அந்த சவாலை சமாளிக்க நாங்கள் காத்திருக்கிறோம்”

- Advertisement -

“குறிப்பாக சொந்த மண்ணில் விளையாடும் அணிக்கு எதிராக செமி ஃபைனலில் விளையாடுவது ஆர்வத்தை கொடுத்துள்ளது. அவர்கள் எங்களுக்கு அச்சுறுத்தலை கொடுப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அந்த சவாலை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். இதை மற்றுமொரு ஸ்பெஷல் வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். மேலும் செமி ஃபைனல் போன்ற அழுத்தமான போட்டிகளில் ஏற்கனவே விளையாடிய அனுபவத்தை கொண்ட நிறைய வீரர்கள் எங்களுடைய அணியில் இருக்கின்றனர்”

இதையும் படிங்க: தோனி உங்கள மாதிரி அடி மடியில் கை வைக்கல.. பாபரை ஆதரித்த ரமீஸ் ராஜாவை விளாசிய அமீர்

“நாங்கள் அவர்கள் மீது சாய்ந்து கொண்டு செல்வோம் என்பதை சொல்வது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. எனவே உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடுவது எங்களுடைய (கோல்) இலக்காகும். இந்த பெரிய தொடரில் அதை ஒரு படிக்கு முன்பாக நெருங்கியுள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். அதை தொடர்ந்து செய்தாலே எஞ்சிய அனைத்தும் எங்களை பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார்.

Advertisement