இந்த ஃபீல்டிங் கூடவா தெரியாது? வெற்றியை பறித்த ஸ்மித் கேட்ச்சை விட்ட கோலி – புஜாராவை விளாசும் முன்னாள் வீரர்

catch
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோற்று வெறும் கையுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஷ்வினை கழற்றி விட்ட தவறான அணி தேர்வும் டாஸ் அதிர்ஷ்டத்தை முதலில் பேட்டிங் செய்து சரியாக பயன்படுத்த தவறிய ரோகித் சர்மாவின் முடிவும் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அத்துடன் ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் வெறும் 4 ஓவர்களை மட்டும் வீசிய இந்திய பவுலர்கள் முழுமையாக தயாராகாமல் இந்த ஃபைனலில் நேரடியாக களமிறங்கி ஒரே நாளில் 17 ஓவர்கள் வரை சோர்வுடன் வீசி ரன்களை வாரி வழங்கியது மற்றொரு காரணமாக அமைந்தது. அது போக நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் என்று போற்றப்படும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி ஆகியோரில் யாருமே ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்வியை கொடுத்தது.

மோசமான ஃபீல்டிங்:
அதே போல் இந்த போட்டியில் ரகானே, ஜடேஜா போன்ற ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உட்பட பெரும்பாலானவர்கள் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் அடித்ததால் ஆரம்பத்திலேயே மனதை விட்டு சுமாராக ஃபீல்டிங் செய்தனர். அதிலும் குறிப்பாக 121 ரன்கள் குவித்து தோல்விக்கு காரணமாக அமைந்த ஸ்டீவ் ஸ்மித் குறைந்த ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் மற்றும் அலெக்ஸ் கேரி 41 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோருக்கு இடையே சென்ற போதிலும் அதை அவர்கள் பிடிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

pujara 1

இந்நிலையில் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகி வரும் என்பது தெரிந்தும் சற்று பின்னே நிற்காமல் விராட் கோலி – புஜாரா தவற விட்ட ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற அம்சங்கள் நீங்கள் களமிறங்குவதற்கு முன்பாகவே சரி செய்யப்பட வேண்டும். இது போன்ற வாய்ப்புகளை நீங்கள் தவற விடக்கூடாது. இது சோம்பேறித்தனமாகும். குறிப்பாக எதிரணி டிக்ளேர் செய்யப் போகிறார்கள் என்பதால் தங்களிடம் கேட்ச் வரப்போவதில்லை என ஸ்லிப் பகுதியில் நிற்கும் ஃபீல்டர்கள் நினைக்கக் கூடாது”

- Advertisement -

“ஏனெனில் அது தான் போட்டியின் முக்கிய தருணமாக அமையலாம். மேலும் கால் சட்டைக்குள் பாதுகாப்புக்கு உபகரணம் அணிந்து கொள்வது உங்களுடைய வேகத்தை குறைக்காது என்பதை நான் நம்பவில்லை. எனவே சற்று கடினமாக வரும் கேட்ச்களை பிடித்து பாதி வாய்ப்புகளை வெற்றி வாய்ப்புகளாக நீங்கள் மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த பாதி கேட்ச் விராட் கோலிக்கு கொஞ்சம் முன்பாக தரையில் பட்டது. ஆனால் அப்போது வெறும் 190 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்த நிலையில் ஒருவேளை அந்த கேட்ச்சை பிடித்து ஸ்மித் அவுட்டாகியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யார் அறிவார்”

Kaif

இதையும் படிங்க:TNPL 2023 : கில்லியாக சொல்லி அடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ரன் மழை பொழிந்து சேலத்தை மடக்கியது எப்படி?

“பொதுவாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் ஸ்லிப் பகுதியில் நீங்கள் ஸ்டம்ப்களிலிருந்து 25 யார்ட் தள்ளி நிற்க வேண்டும். ஆனால் ஆசியாவில் நீங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அருகே நிற்கலாம். எனவே விராட் கோலி போன்ற அனுபவம் மிகுந்த ஒருவர் அது போன்ற கேட்ச்களை பிடிக்க எங்கே நிற்க வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற சிறிய விஷயங்களில் கூட நீங்கள் உங்களது அணியை வெற்றி பெற வைக்கலாம்” என்று கூறினார்.

Advertisement