இது இந்திய அணிக்கு கெட்ட செய்தி, இனியும் அவர் விளையாடுவார்ன்னு என்ன கேரண்டி – நட்சத்திர இந்திய வீரர் மீது கைப் அதிருப்தி

Kaif
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாளத்தை துவம்சம் செய்து வெற்றி வாகை சூடிய பாகிஸ்தானை தங்களுடைய முதல் போட்டியில் இந்தியா வரும் செப்டம்பர் 2ஆம் தேதி எதிர்கொள்கிறது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியினர் பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் நடத்தப்பட்ட யோயோ டெஸ்டில் தேர்ச்சி பெற்று இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர். குறிப்பாக அதில் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ச்சி பெற்று இலங்கைக்கு சென்றுள்ளது 4வது இடத்தில் விளையாடப்போகும் பேட்ஸ்மேன் பற்றிய மிகப் பெரிய பிரச்சனையை தெரிவித்துள்ளது.

ஆனால் 2023 ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல் பயிற்சிகளை செய்யும் போது மீண்டும் லேசான காயத்தை சந்தித்துள்ளதால் இந்த ஆசிய கோப்பையின் முதலிரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என்று பேச்சாளர் ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே துவக்க வீரராக தடவலாக செயல்பட்டு திண்டாடிக் கொண்டிருந்த அவர் ரிஷப் பண்ட்க்கு பதிலாக கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூஸிலாந்து தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

கைப் ஏமாற்றம்:
அதனால் உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று ரசிகர்கள் நிம்மதியடைந்த நிலையில் மீண்டும் தற்போது காயத்தை சந்தித்துள்ள அவர் ஆசிய கோப்பையின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவருக்கு பதிலாக விளையாடுவார் என்று கருதப்படும் இசான் கிசான் பெரும்பாலும் தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய நிலையில் அழுத்தமான மிடில் ஆர்டரில் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கேஎல் ராகுல் மீண்டும் காயத்தை சந்தித்து இந்தியாவுக்கு கெட்ட செய்தியுடன் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் முகமது கைஃப் 2 போட்டிகளுக்கு பின் விளையாடுவார் என்பது என்ன நிச்சயம்? என கூறியுள்ளார். மேலும் ராகுல் அளவுக்கு அனுபவமற்ற இஷான் கிசான் மிடில் ஆர்டரில் அசத்த மாட்டார் என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போதைய நிலைமையில் கேஎல் ராகுலின் காயம் அதிகரிக்கலாம். அதனால் தற்போது ஃபிட்டாக இல்லாமல் இருக்கும் அவர் 2 போட்டிகளுக்கு பின் குணமடைந்து உறுதியாக விளையாடுவார் என்று சொல்வதற்கு எந்த கேரண்டியும் இல்லை. இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி நல்லதல்ல. ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் ராகுல் 5வது இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். அங்கே அவர் சிறப்பாக விளையாடியுள்ளதாக புள்ளி விவரங்களும் காட்டுகின்றன”

இதையும் படிங்க: வீடியோ : புல்லட் வேகத்தில் பவுண்டரி லைனை நோக்கி பறந்த பந்து. பாய்ந்து பிடித்த சுட்டிக்குழந்தை

“அத்துடன் அவருக்கு எப்போது கியரை மாற்றி எந்த வகையான ஷாட்களை அடுத்து போட்டியை சீராக எடுத்துச் செல்ல முடியும் என்பது தெரியும். அதனால் இஷான் கிசான் விளையாடினாலும் அவருக்கான மாற்று வீரராக இருக்க முடியாது. ஏனெனில் விக்கெட் கீப்பிங் தவிர்த்து ஃபினிஷிங் செய்யும் திறமையும் ராகுலிடம் இருக்கிறது” என்று கூறினார். இருப்பினும் ஏற்கனவே சுமாரான ஃபார்மில் இருக்கும் ராகுல் காயமடைந்து வெளியேறியதே நல்ல செய்தி என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement