புல்லட் வேகத்தில் பவுண்டரி லைனை நோக்கி பறந்த பந்து. பாய்ந்து பிடித்த சுட்டிக்குழந்தை

Sam-Curran
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்த வேளையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 41 ரன்களையும், பின் ஆலன் 21 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 14 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மலான் 54 ரன்களையும், ஹாரி புரூக் 43 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது பிலிப்ஸ் 38 பந்துகளை சந்தித்து இருந்த வேளையில் சிக்சருக்கு தூக்கி அடிக்க முயற்சித்தார். அப்போது பவுண்டரி லைனை நோக்கி வேகமாக சென்ற பந்து காற்றில் வளைந்த வாரே சென்றது.

- Advertisement -

இதையும் படிங்க : அந்த ஒரு பாகிஸ்தான் பவுலரே விராட் கோலியை அடக்கி ரோஹித்தை தெறிக்க விடுவாரு பாத்துகோங்க – இந்தியாவை எச்சரித்த ப்ராட் ஹாக்

அதனை லாபகமாக எதிர்கொண்ட சாம் கரண் இடதுபுறம் பறந்த படி அற்புதமான டைவ் மூலம் கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். சுட்டிக்குழந்தை சாம் கரண் பிடித்த இந்த கேட்ச்சானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டி20 போட்டியானது நாளை செப்டம்பர் 1-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement