- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுல மட்டும் சூரியகுமார் என்னை ஏமாத்திகிட்டே இருக்காரு, அவரோட வீக்னெஸ் அது தான் – முகமது கைஃப் ஆதங்கம்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக சாதனை படைத்த சுப்மன் கில் தவிர்த்து யாருமே 40 ரன்கள் கூட தாண்டாதது இந்தியாவுக்கு கடைசியில் பெரிய பின்னடைவு ஏற்படுத்தியது. குறிப்பாக தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் இலங்கை ஒருநாள் தொடரில் முழு வாய்ப்பு பெறாத நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் 5வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

இருப்பினும் 20வது ஓவரில் களமிறங்கிய அவர் நிலைத்து நின்று விளையாட முயற்சித்த போதிலும் 4 பவுண்டரியுடன் 31 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக தாமதமாக 30 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்து இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ளார்.

- Advertisement -

எதோ தடுமாற்றம்:
ஆனால் டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை அசால்டாக அடித்துள்ள அவர் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் கடந்த 10 இன்னிங்ஸில் 86.33 என்ற அபாரமான சராசரியை கொண்டுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 14.11 என்ற மோசமான பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். அதனால் ஒருவேளை இவர் பொறுமைக்கும் வேகத்துக்கும் இடைப்பட்ட கிரிக்கெட்டாக கருதப்படும் ஒருநாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வர மாட்டாரோ என்ற கருத்து சமீப காலங்களாகவே ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அசத்தும் சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஏமாற்றத்தை கொடுத்து வருவதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆச்சரியத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவருடைய வீக்னஸ் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் அவர் அபாரமான ஃபார்மில் உள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை அசத்தவில்லை. குறிப்பாக கடந்த 16 – 17 இன்னிங்சில் அவர் வெறும் 2 அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்படுகிறார் என்பது அவருக்கும் தெரியும்”

- Advertisement -

“மிகச் சிறந்த வீரரான அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அதை வீணடிக்காமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு சில வேலைகளை செய்ய வேண்டும். அவர் மீது எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டும் வித்தியாசமானது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்துமே வித்தியாசமான வடிவங்களாகும். இங்கு யாராவது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஒரே மாதிரியானது என்று சொன்னால் அது நிச்சயமாக உண்மையல்ல”

“ஏனெனில் இந்த வகையான கிரிக்கெட்டில் உங்களுக்கு அதிக நேரங்கள் கிடைக்கும். எனவே அதில் அசத்துவதற்கு சூரியகுமார் வேலை செய்ய வேண்டும். மேலும் கடந்த போட்டியில் அவர் அவுட்டான லைனில் தான் அவருடைய வீக்னஸ் உள்ளது. குறிப்பாக பந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் திசைக்கு சற்று வெளியே பிட்ச்சாகி வரும் போது அவர் தடுமாறுகிறார். அவருடைய பேட் எப்போதும் ஒரே மாதிரியான கோணத்தில் வருகிறது. குறிப்பாக அந்த பந்தில் வேகமில்லை. ஒருவேளை அதில் வேகம் இருந்திருந்தால் பாயிண்ட் அல்லது எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் அவரால் அடித்திருக்க முடியும்”

இதையும் படிங்க: இனிமேல் இஷ்டத்துக்கு பண்ண முடியாது, மன்கட் ரன் அவுட் விதிமுறையில் எம்சிசி அதிரடி மாற்றம் – விவரம் இதோ

“எனவே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் திசைக்கு அருகில் வரும் பந்துகளை அவர் சிறப்பாக எதிர்கொள்ள வேலை செய்ய வேண்டுமென கருதுகிறேன். அதே சமயம் அவர் லெக் சைட் திசையில் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் அனைத்து நேரங்களிலும் பவுலர்கள் அங்கே வீச மாட்டார்கள். அவரை அவுட்டாக்க பவுலர்கள் ஆஃப் ஸ்டம்ப் திசையில் தான் வீசுவார்கள். ஏனெனில் அங்கே தான் அவருடைய வீக்னஸ் உள்ளது” என்று கூறினார்.

- Advertisement -