இனிமேல் இஷ்டத்துக்கு பண்ண முடியாது, மன்கட் ரன் அவுட் விதிமுறையில் எம்சிசி அதிரடி மாற்றம் – விவரம் இதோ

Adam Zamba Mankad
- Advertisement -

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தற்சமயத்தில் மன்கட் எனப்படும் ரன் அவுட் எப்போது நிகழ்ந்தாலும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்ப காலம் முதலே அடிப்படை விதிமுறையில் இருந்து வரும் இந்த வகையான அவுட் ஒரு முறை இந்திய வீரர் வினோ மன்கட் செய்ததிலிருந்து அவரது பெயருடன் அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால் பவுலர் மட்டும் வெள்ளை கோட்டுக்கு வெளியே ஒரு இன்ச் காலை வெளியே வைத்து போட்டாலும் உடனடியாக அதற்கு தண்டனையாக நோபால் வழங்கி ஃப்ரீ ஹிட் கொடுக்கும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் பந்து வீசுவதற்கு முன்பாகவே பல அடிகள் வெளியேறுவது எந்த வகையில் நியாயம் என்ற கோட்பாட்டை கொண்ட தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் செய்தார்.

அதற்காக உலக அளவில் திட்டுகளை வாங்கியும் விதிமுறைக்குட்பட்டதாக விடாப்பிடியாக நின்ற அவர் இதர பவுலர்களும் அதை செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அதில் நியாயமும் இருந்ததால் மன்கட் அவுட்டை நேர்மைக்கு புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு கடந்த வருடம் லண்டனின் எம்சிசி அமைப்பு மாற்றியதை ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன் பின் சார்லி டீனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்ததும் சமீபத்தில் இலங்கை கேப்டன் சனாக்காவை முகமது ஷமி 98 ரன்களில் ரன் அவுட் செய்த போது கேப்டன் ரோகித் சர்மா வாபஸ் பெற்றதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதிரடி மாற்றம்:
அதை விட ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரின் தொடரின் ஒரு போட்டியில் ஆடம் ஜாம்பா அந்த வகையில் ரன் அவுட் செய்தும் நவுடுவர் அவுட் கொடுக்க மறுத்தது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. குறிப்பாக பேட்ஸ்மேன் வெளியேறியதை பார்த்த பின் வேண்டுமென்றே 90 டிகிரி கற்பனை செங்குத்து கோட்டை கடந்து அவர் அவுட் செய்ததாக தெரிவித்த நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் அவ்வாறு விதிமுறையில் சொல்லப்படவில்லை என்று மீண்டும் அஷ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அந்த புதிய கூற்று உண்மைதான் என்று தெரிவித்துள்ள எம்சிசி மன்கட் ரன் அவுட் விதிமுறையில் அதற்கான மாற்றத்தையும் புதிதாக கொண்டு வந்துள்ளது. அதாவது பவுலர் பந்தை வீசியதாக நினைத்து பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறும் போது பவுலர் ஒரு குறிப்பிட்ட உச்சத்தை (90 டிகிரி கற்பனை செங்குத்து கோடு) கடந்த பின் அவுட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எம்சிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

இது பற்றி எம்சிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த விதிமுறை பொதுவாக வீரர்கள் மற்றும் நடுவர்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டாலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் வார்த்தைகளில் தெளிவின்மை உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனவே எம்சிசி தற்போது சிறந்த தெளிவை வழங்க சட்டம் 38.3 பிரிவின் வார்த்தைகளை மாற்றத்தை நகர்த்தியுள்ளது”

“அதாவது பந்து வீச்சாளர் சாதாரணமாக பந்தை விடுவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் தருணத்தில் பந்து வீச்சில் அவரது/அவளின் இயல்பான பந்து வீச்சு நடவடிக்கையின் அதிகபட்ச புள்ளியை பந்து வீச்சாளரின் கை அடையும் தருணம் என வரையறுக்கப்படுகிறது”

- Advertisement -

“இது விதிமுறை உடனடியாக ஜனவரி 19 2023 முதல் நடைமுறைக்கு வரும். இந்த விதிமுறையின் பொருளுக்கு மாற்றமானதல்ல என்பதால் எம்சிசி சட்டப் புத்தகங்களை மீண்டும் அச்சிடாது. ஆனால் இந்த மாற்றம் ஏற்கனவே அனைத்து ஆன்லைன் பொருட்களிலும் எதிரொலித்துள்ளது” என்று கூறியுள்ளது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஆடம் ஜாம்பா (மேலே) மற்றும் அஷ்வின் (கீழே) செய்த 2 வெவ்வேறு மன்கட் அவுட்களை இங்கே ரசிகர்கள் புரிந்து கொள்வதற்காக இணைத்துள்ளோம்.

இதையும் படிங்க: போன முறையும் அப்டிதான் பண்ணாங்க, இந்தியாவில் நியாயத்தை மட்டும் எதிர்பார்க்க முடியாது – ஸ்டீவ் ஸ்மித் விமர்சனம்

அதாவது பவுலர் பந்தை கையிலிருந்து விடுவிக்கும் வரை பேட்ஸ்மேன்கள் வெள்ளை கோட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எம்சிசி கூறியுள்ளது. ஆனால் அதற்காக பவுலர் பந்தை வீசுவது போல் சென்று பந்தை விடுவிக்கும் உச்சகட்ட புள்ளியை (90 டிகிரி கற்பனை செங்குத்து கொடு) தாண்டிய பின் பந்து வீசாமல் ரன் அவுட் செய்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எம்சிசி கூறியுள்ளது.

Advertisement