போன முறையும் அப்டிதான் பண்ணாங்க, இந்தியாவில் நியாயத்தை மட்டும் எதிர்பார்க்க முடியாது – ஸ்டீவ் ஸ்மித் விமர்சனம்

Smith
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கிடையே அதிகப்படியான போட்டி நிலவுகிறது. அதில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் பைனல் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. மறுபுறம் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும் கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் வென்று பைனலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AUs vs IND

மறுபுறம் ஃபைனல் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால் 2004க்குப்பின் எப்படியாவது இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க ஆஸ்திரேலியா போராட உள்ளது. அதை விட கடைசியாக 2018/19, 2019/20 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்து அவமான தோல்வி பரிசளித்த இந்தியாவுக்கு இம்முறை அதன் சொந்த மண்ணில் தோல்வியை கொடுத்து பழி வாங்க பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தயாராகி வருகிறது.

- Advertisement -

தரமற்ற மைதானங்கள்:
அப்படி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இத்தொடரில் நிச்சயமாக சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் என்ன தான் பேட்டிங்க்கு சாதகமான மைதானங்கள் அமைத்தாலும் இந்திய மண்ணில் இயற்கையாகவே முதலிரண்டு நாட்களுக்குப் பின் பிட்ச் தாமாகவே சுழலுக்கு கை கொடுக்க ஆரம்பித்து விடும். அதனால் இரு அணிகளும் எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை வைத்து விளையாடும் யுக்தியை கடைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Delhi Cricket Stadium

இந்நிலையில் கடைசியாக கடந்த 2017இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பயிற்சி போட்டியில் பச்சை புற்கள் நிறைந்த ஆடுகளம் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் முதன்மையான டெஸ்ட் போட்டிகளில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அப்போது கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். குறிப்பாக புனேவில் தாறுமாறாக சுழன்ற மைதானத்தில் சதமடித்து இந்தியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்த அவர் இம்முறையும் இந்தியாவில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமில்லாத மைதானங்கள் தான் அமைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இது பற்றி பெர்த் நொவ் பத்திரிக்கையில் அவர் கொடுத்த பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடைசியாக இந்தியாவில் நாங்கள் விளையாடிய போது பயிற்சி போட்டியில் பச்சை புற்கள் நிறைந்த ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தது என என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஆனால் அது ஒரு டெஸ்ட் போட்டிக்கு தயாராகுவதற்கு தகுதியான ஆடுகளம் கிடையாது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் புனேவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. எனவே அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். குறிப்பாக அதற்கான திட்டங்களையும் வலை பயிற்சிகளையும் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் இம்முறை நடுத்தரமான ஆடுகளங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

Smith

முன்னதாக கடந்த இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு தலைப்பட்சமாக நியாயமற்ற சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தது போலவே இம்முறையும் அமைக்கப்பட்டிருந்தால் இந்தியா தான் 2 – 1 (4) என்ற கணக்கில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர் இயன் ஹீலி சமீபத்தில் இதே போல் விமர்சித்திருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவில் மட்டும் இயற்கையாகவே வேகம், பவுன்ஸ் இருக்கும் என்று சொல்லும் அந்நாட்டவர்கள் தொடர்ந்து வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பது வழக்கமாகும்.

இதையும் படிங்க: IND vs NZ : 2வது ஒன்டே நடக்கும் ராய்ப்பூர் மைதானம் எப்படி? புள்ளி விவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அதை எப்போதுமே குறை சொல்லாத இந்தியா அதற்கேற்றார் போல் தங்களை தயார்படுத்திக் கொண்டு கடந்த 2 முறை அடுத்தடுத்த வெற்றிகளை ருசித்து சாதனை படைத்தது. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் மட்டும் இந்திய மண்ணில் இயற்கையாக இருக்கும் சுழலை செயற்கையாக பிசிசிஐ உருவாக்குவதாக குறை கூறுவது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Advertisement