
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அணியில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த இடத்தை பிடிப்பதற்கு கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ரிசப் பண்ட் ஆகியோருக்கு மத்தியில் போட்டி காணப்படுகிறது. அதில் கடந்த உலகக் கோப்பையில் அசத்திய ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் ரிசப் பண்ட்டை விட சஞ்சு சாம்சன் பன்மடங்கு முன்னேறி சென்றுள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைப் பாராட்டியுள்ளார். எனவே அவருக்கு சாம்பியன்ஸ் டிராபியில் இடம் கிடைத்தால் அது தகுதியானது என்று கைஃப் தெரிவித்துள்ளார். அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனிக்கு நிகராக ரிஷப் பண்ட் அசத்தி வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.
இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்று ஃகைப் கூறியுள்ளார். எனவே அவர் கடினமாக உழைக்க வேண்டும் என்று தெரிவிக்கும் கைஃப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் முன்னோக்கி சென்று விட்டார் என்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரிஷப் பண்ட் விஷயத்தில் மக்கள் தங்களுடைய உணர்வுகளை இணைத்துள்ளார்கள்”
“டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெரிய மேட்ச் வின்னர். காபா மைதானத்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகளை யாரால் மறக்க முடியும்? வெளிநாடுகளில் அவர் நன்றாக விளையாடுகிறார். நல்ல விக்கெட் கீப்பரான அவர் சஞ்சு சாம்சனை விட சிறந்தவர். அவர் கிட்டத்தட்ட எம்எஸ் தோனி அளவை நெருங்கியுள்ளார். ரிஷப் பண்ட் தன்னுடைய நிதர்சனத்தை புரிந்து கொள்ள வேண்டும்”
“யாராவது உங்களிடம் தவறான விஷயங்கள் நடத்தப்பட்டுள்ளது. என்று சொன்னால் அவர் அதைக் கேட்கக் கூடாது. அவர் அது போன்ற நண்பர்களை தவிர்க்க வேண்டும். அதே சமயம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உங்களுடைய புள்ளி விவரங்கள் மற்றும் ஆட்டங்கள் நன்றாக இல்லை என்று அவரிடம் சொல்ல வேண்டும். சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் ட்ராஃபியில் தனக்கான இடத்தை பெறுவதற்கு தகுதியாக உள்ளார்”
இதையும் படிங்க: சச்சின் கூட இப்படி இருந்ததில்லை.. இது இந்திய அணியா? பாலிவுட் நாடகமா? சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்
“ரிஷப் பண்ட் அதில் கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் 16 போட்டிகளில் 510 ரன்களை 56.66 என்ற சராசரியில் குவித்துள்ளார். மறுபுறம் ரிஷப் பண்ட் 31 போட்டிகளில் 871 ரன்களை 33.50 என்ற சராசரியில் குவித்து சுமாராகவே செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.