சச்சின் கூட இப்படி இருந்ததில்லை.. இது இந்திய அணியா? பாலிவுட் நாடகமா? சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்

Sanjay Manjrekar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதன் காரணமாக இந்திய அணிக்கு பிசிசிஐ புதிதாக 10 கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதில் அனைத்து வீரர்களும் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கி பயிற்சிக்கு செல்ல வேண்டுமென்ற விதிமுறையும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதைப் பார்க்கும் ரசிகர்கள் அப்படியானால் இத்தனை நாட்களாக இந்திய வீரர்கள் ஒன்றாக தங்கி விளையாடவில்லையா? என்று கேள்வி அனுப்புகிறார்கள். இந்நிலையில் தற்போது இருப்பது இந்திய அணியா? பாலிவுட் நாடக கம்பெனியா? என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பாலிவுட் நட்சத்திரம்:

“நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விகளை அடுத்து இந்த அறிவிப்புகள் வந்திருப்பது முக்கியத்துவத்தை பெறுகிறது. இந்திய அணி வெல்லும் போது இவை வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் தோல்வியை சந்திக்க ஒரு சிறிய காரணமாக இருக்கலாம்”

“இது அடிப்படை விஷயங்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்படித்தான் நாங்கள் எங்களுடைய மொத்த கேரியரில் விளையாடினோம். நாங்கள் எங்களுடைய அறைகளை பகிர்ந்து கொண்டோம். தொடரின் கடைசி 2 வாரங்களில் எங்கள் குடும்பங்கள் எங்களை காண வருவார்கள். எங்களுடைய காலத்தில் சச்சின் பெரிய நட்சத்திரம். இருப்பினும் அவர் எப்போதும் அணியுடன் தான் இருப்பார்”

- Advertisement -

ஒன்றாக சச்சின்:

“அவர் பாதுகாவலர் வைத்துக்கொள்ள மாட்டார். இந்திய அணியுடன் இருந்தாலே உங்களுக்கு போதுமான பாதுகாப்பு இருக்கும். ஆனால் தற்போதைய இந்திய அணியை பார்க்கும் போது கொஞ்சம் பாலிவுட் கலாச்சாரம் இருப்பது போல் தெரிகிறது. நான் நம்முடைய இந்திய அணி உண்மையாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் இது விளையாட்டாகும்”

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு காரணமா? 5இல் 3 சதத்தை அடிச்ச சாம்சனுக்கு சாம்பியன்ஸ் ட்ராபியில் சான்ஸ் கொடுங்க.. ஹர்பஜன்

“அதே சமயம் அதிகமாக விளையாடுவதால் குடும்பங்கள் அனுமதிக்கப்படுவது அவசியம் என்று வீரர்கள் சொல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் இப்போதெல்லாம் வீரர்கள் அடிக்கடி ஓய்வை எடுத்து தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார்கள். வீரர்கள் தங்களுடைய சொந்த வழியில் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்திய அணிக்காக விளையாடுவது அழுத்தமான பதற்றமான ஒரு வேலையாகும். அந்த வேலையில் குடும்பங்கள் இருப்பது அணியின் சூழ்நிலைக்கு உதவாது” எனக் கூறினார்.

Advertisement