இதெல்லாம் ஒரு காரணமா? 5இல் 3 சதத்தை அடிச்ச சாம்சனுக்கு சாம்பியன்ஸ் ட்ராபியில் சான்ஸ் கொடுங்க.. ஹர்பஜன்

Harbhajan Singh 3
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் ஆரம்பக் காலம் முதல் தடுமாறி வந்த அவர் சமீபத்திய டி20 போட்டிகளில் 3 சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

ஆனால் 2025 விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடரில் கேரளா அணிக்காக சாம்சன் சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. அதனால் சாம்பியன்ஸ் டிராபி அணியில் தேர்வுக்குழு அவரை கழற்றி விட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 2023 உலகக் கோப்பையில் அசத்திய கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதெல்லாம் காரணமா:

இந்நிலையில் இதெல்லாம் ஒரு காரணம் இல்லை என்று தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் நல்ல ஃபார்மில் இருக்கும் சாம்சனை சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சாம்சன் தனது கடைசி 5 போட்டிகளில் 3 சதங்கள் அடித்துள்ளார். அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் 56 என்ற சராசரியை கொண்டிருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கருதவில்லை”

“அவரை என்னுடைய அணியில் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் இந்திய தேர்வாளர்கள் வேறு மாதிரி சிந்திக்கலாம். அதே சமயம் அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று நான் கருதுகிறேன். ஒருவர் 5 போட்டிகளில் 3 சதங்கள் அடித்தால் தனது இடத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். நல்ல ஃபார்மில் தன்னம்பிக்கையுடன் இருக்கும் அவர் 2 சதங்களை தென்னாப்பிரிக்காவில் அடித்தார்”

- Advertisement -

ஹர்பஜன் ஆதரவு:

“சொந்த மண்ணுக்கு வெளியே 2 சதங்கள் அடிப்பது பெரிய விஷயம். ஆனால் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடவில்லை என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல்கள் காணப்படுகின்றன. அவருக்கும் கேரள வாரியத்திற்கும் ஏதோ இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தேர்வாளர்கள் சாம்பியன்ஸ் டிராபியிலும் சாம்சனை கழற்றி விட வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: யுஸ்வேந்திர சாஹலை பின்னுக்கு தள்ளி வரலாறு படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங் – விவரம் இதோ

“ஆனால் அதில் உண்மை என்ன என்பதை கண்டறிந்து முடிவு எடுக்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் குவித்த ரோகித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தியதை நாம் பார்க்கிறோம். அதே போல ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தியதால் ஜெய்ஸ்வால் ஒருநாள் அணியில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏன் டி20 போட்டிகளில் அசத்திய சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்கக் கூடாது” என்று கூறினார்.

Advertisement