- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மொத்த இந்தியாவையும் கொண்டாட வைத்த.. ரோஹித்தை இப்படி அவமானப்படுத்தலாமா? கம்பீரை விமர்சித்த ஃகைப்

ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் ரோகித் தலைமையில் விளையாடிய இந்தியா 2 தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

அந்த சூழ்நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் எஞ்சிய வாய்ப்பையும் இந்த கோப்பையையும் தக்க வைத்துக்கொள்ள கடைசிப் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதன் காரணமாக சுமாரான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா கடைசி போட்டியில் நீக்கப்பட்டார். அணியின் நலனுக்காக அவர் அந்த முடிவை எடுத்ததாக புதிய கேப்டன் பும்ரா தெரிவித்தார்.

- Advertisement -

கைப் விமர்சனம்:

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ரோகித் தலைமையில் இந்தியா வரலாறு காணாத வைட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பாக 2024 டி20 உலகக் கோப்பை வென்ற ரோகித் சர்மா மொத்த இந்தியாவையும் கொண்டாட வைத்ததாக முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட அவரை வெறும் 2 தொடரில் சுமாராக செயல்பட்டதற்காக நீக்கியது சரியில்லை என்று கைப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் ஆதரவு கொடுக்காமல் ரோகித்தை நீக்கிய கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோரையும் கைப் சாடியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

உலகக் கோப்பை வென்ற கேப்டன்:

“ஓய்வு கொடுப்பதற்கு அல்லது நீக்கப்படுவதற்கு ரோகித் சர்மா ஒன்றும் சாதாரண கேப்டன் கிடையாது. கௌதம் கம்பீர் அல்லது தேர்வாளர்கள் உட்பட யார் ரோகித் சர்மாவை நீக்கி இருந்தாலும் அது சரியான முடிவல்ல. ஏனெனில் மரியாதைக்குரிய கேப்டனான அவர் இந்த முக்கியமான டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். அவர் தான் இந்த அணியை உருவாக்கியவர்”

இதையும் படிங்க: 50க்கு 184 ஸ்ட்ரைக் ரேட்.. ஆஸியை தெறிக்க விட்டாரு.. ரிஷப் பண்ட் தாக்கத்தை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

“அவர் நம் வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து ஆறு மாதத்திற்கு முன் டி20 உலகக் கோப்பையை வென்றவர். அதனால் அவர் நம்முடைய நாட்டிற்கு ஏராளமான மகிழ்ச்சியையும் கொண்டு வந்தார். அந்த வகையில் நல்ல தலைவரான அவரை நீங்கள் இப்படி நீக்கக்கூடாது” என்று கூறினார். மேலும் விராட் கோலி, உஸ்மான் கவாஜா ஆகியோரும் இதே தொடரில் ரன்கள் அடிக்கவில்லை என்று கைப் கூறியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் ரோகித்தை மட்டும் நீக்கியது சரியில்லை என்றும் கைப் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -