50க்கு 184 ஸ்ட்ரைக் ரேட்.. ஆஸியை தெறிக்க விட்டாரு.. ரிஷப் பண்ட் தாக்கத்தை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

Sachin Tendulkar
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 3ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை அற்புதமாக பந்து வீசிய இந்தியா 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் நான்கு ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 141-6 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

பண்ட் மிரட்டல்:

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 22, ராகுல் 13, விராட் கோலி 6, சுப்மன் கில் 13, நிதிஷ் ரெட்டி 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 61 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் வாஷிங்டன் சுந்தர் 6*, ரவீந்திர ஜடேஜா 8* ரன்களுடன் உள்ளனர்.

தற்போதைய நிலையில் 145 ரன்கள் முன்னிலை வகிக்கும் இந்தியா இங்கிருந்து 230 – 250 ரன்களை இலக்காக நிர்ணயத்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று சொல்லலாம். அதற்கு 6 பவுண்டரி 4 சிக்சர்களைப் பறக்க விட்ட ரிஷப் பண்ட் 61 (33) ரன்களை 184.85 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசியது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பேட்டிங் செய்வதற்கு சவாலான பிட்ச்சில் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட அவர் ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

குறிப்பாக 29 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வேகமாக டெஸ்ட் அரை சதமடித்த வெளிநாட்டு வீரராக உலக சாதனையும் படைத்தார். இந்நிலையில் அவருடைய ஆட்டம் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 3 ஆவது நாள் ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா? அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை – பிரசித் கிருஷ்ணா தகவல்

“பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் 50க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்த பிட்ச்சில் ரிஷப் பண்ட் 184 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய இன்னிங்ஸ் குறிப்பிடத்தக்க ஒன்று. அவர் ஆஸ்திரேலியாவை முதல் பந்தில் இருந்தே தெறிக்க விட்டார். அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது எப்போதும் பொழுதுபோக்காக இருக்கும். என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இன்னிங்ஸ்” என்று கூறினார்.

Advertisement