3 ஆவது நாள் ஆட்டத்தில் பும்ரா விளையாடுவாரா? அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை – பிரசித் கிருஷ்ணா தகவல்

Prasidh
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது சிட்னி நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டியில் கேப்டனாக விளையாடி வரும் ஜஸ்ப்ரீத் பும்ரா இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் பந்து வீசாமல் மைதானத்தில் இருந்து வெளியேறியது ரசிகர்களை கவலை அடைய வைத்தது.

பும்ரா விளையாடுவதை அவங்க தான் முடிவு செய்வாங்க :

அதோடு மட்டுமில்லாமல் மைதானத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பும்ராவிற்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு முதுகுப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆனால் பும்ரா எவ்வகையான காயத்தை சந்தித்துள்ளார்? அவர் மீண்டும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பந்து வீசுவாரா என்கிற பல கேள்விகள் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிந்த பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா பும்ரா குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ராவிற்கு இரண்டாம் நாளிற்கு முன்பாகவே முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் அவர் அவதி அடைந்துள்ளார். அதன் காரணமாகவே மைதானத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அதில் பும்ராவிற்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவக்குழு கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இதன் காரணமாக நிச்சயம் நாளைய நான்காவது மூன்றாவது நாள் ஆட்டத்தில் அவர் பந்துவீச வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அது மருத்துவக்குழுவினரின் முடிவாக இருக்கும் தெரிகிறது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய மண்ணில் வெளிநாட்டு வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

ஏனெனில் ஏற்கனவே முதுகு பகுதியில் பும்ரா அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் விளையாடி வரும் வேளையில் மீண்டும் ஒருமுறை காயம் அதிகரித்தால் அது அவருக்கு பிரச்சினையாகிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டத்தில் அவர் பந்து வீச மாட்டார் என்று தெரிகிறது.

Advertisement