விராட் கோலிக்கு ஒரு நியாயம் ரோஹித்துக்கு ஒரு நியாயமா? இந்தியா மோசமான டீம் இல்லை – விமர்சனங்களுக்கு கைஃப் பதிலடி

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றால் மட்டுமே 2023இல் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா விளையாடுகிறது. ஆனால் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் பங்கேற்காதது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

BCCI-and-Rohit

- Advertisement -

முன்னதாக 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தலைமையில் இரு தரப்பு தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால் சந்தித்த விமர்சனங்கள் மற்றும் பணிச் சுமையை நிர்வகிப்பதற்காக கேப்டன் பதவியிலிருந்து வெளியேறிய அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்ட இந்தியா டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது.

மோசம் இல்லை:

ஆனால் 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பையிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் அழுத்தமான போட்டிகளில் சொதப்பிய இந்தியா வழக்கம் போல கோப்பையை வெல்லாமல் வெறும் கையுடன் வெளியேறி எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தது. அத்துடன் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் ரன்களை குவிக்க முடியாமல் திண்டாடும் அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு கேப்டன்ஷிப் செய்வதிலும் தடுமாறுகிறார்.

Rohith-1

அத்துடன் முக்கிய நேரங்களில் இதர வீரர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தும் அவர் காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் அடிக்கடி ஓய்வெடுப்பதால் வரலாற்றில் இந்த வருடம் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. இதனால் கடுப்பாகியுள்ள பிசிசிஐ டி20 கிரிக்கெட்டில் பாண்டியாவை அடுத்த கேப்டனாக மறைமுகமாக அறிவித்துள்ளது. அத்துடன் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் மீண்டும் தோல்வி கிடைக்கும் பட்சத்தில் அவரின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியும் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் 2017 முதல் 2021 வரை 4 ஐசிசி தொடர்களில் விராட் கோலி கோப்பையை வெல்ல முடியாத நிலையில் ஒரு தொடரை வைத்து ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி முடிவெடுப்பது நியாயமற்றது என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மேலும் டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அயர்லாந்திடம் தோற்றதை மறக்காதீர்கள் என்று தெரிவிக்கும் அவர் இப்போதும் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா சிறந்த அணியாகவே செயல்படுவதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Mohammad-Kaif

“கேப்டனாக வந்தது முதல் பலதரப்பு தொடர்களான ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையை தவிர்த்து ரோகித் சர்மா சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். கேப்டனாக விராட் கோலி இருந்த போதும் இதே நிலைமை தான் இருந்தது. அவர் கேப்டனாக இருந்த போது அனைத்து இருதரப்பு தொடர்களையும் வென்றார். எனவே ரோகித் சர்மா கேப்டனாக வந்ததும் சமீப காலங்களில் எந்த கோப்பையையும் வெல்லாத காரணத்தால் இந்தியா உடனடியாக ஐசிசி உலக கோப்பைகளை வென்றாக வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். அதனால் தான் அனைவருக்கும் ஏமாற்றம் மிஞ்சுகிறது. ஆனால் மற்றபடி ரோகித் சர்மாவின் புள்ளி விவரங்கள் சிறப்பாக உள்ளது”

இதையும் படிங்க:  வீடியோ : இவருக்கு எங்கயோ மச்சம் இருக்குப்பா, 2 அல்வா அவுட்டில் அதிர்ஷ்டத்தால் தப்பிய ஷ்ரேயஸ் ஐயர் – சாதித்து காட்டுவாரா

“இந்த உலகக் கோப்பையில் நாம் 4 போட்டிகளை வென்றோம். நம்மை விட சில அணிகளும் தடுமாறின. குறிப்பாக நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்றது. அயர்லாந்திடம் இங்கிலாந்து தோற்றது. என்னை பொறுத்த வரை இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஒரு தோல்வியை தவிர்த்து இந்தியா சிறப்பாகவே செயல்பட்டது. அந்த வகையில் ரோகித் சர்மா நல்ல கேப்டன். அவர் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை மதிப்பிடுவதற்கான முழுமையான நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement