துஷார் தேஷ்பாண்டே மாதிரி பிளேயர்ஸ் வெச்சே.. தோனி கோப்பை ஜெயிக்க அது தான் காரணம்.. ஃகைப்

Mohammed Kaif 2
- Advertisement -

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் கடந்த வருடத்தைப் போல இம்முறையும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடி 6வது கோப்பையை வென்று 2011 போல சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து சரித்திர சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான கேப்டனான எம்எஸ் தோனி கடந்த வருடம் 40 வயதை கடந்தும் முழங்கால் வலியுடன் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து சென்னை 5வது வெல்ல முக்கிய பங்காற்றினர். குறிப்பாக தீபக் சஹார் காயமடைந்ததால் சென்னை பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

தோனியின் ஸ்பெஷல்:
ஆனால் அந்த இடத்தில் துஷார் தேஷ்பாண்டே எனும் உள்ளூர் பவுலரை வைத்து தோனி கோப்பையை வென்ற விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் 16 போட்டிகளில் விளையாடிய தேஷ்பாண்டே 21 விக்கெட்டுகளை எடுத்தாலும் அதற்கு நிகராக ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் அவரையும் வைத்து நம்பி தொடர்ந்து வாய்ப்பு வழங்கிய தோனி தலைமையில் மற்ற அணிகளால் கழற்றி விடப்பட்ட சிவம் துபே, ரகானே ஆகியோரும் அபாரமாக விளையாடி 5வது கோப்பையை வெல்ல உதவினர்.

இந்நிலையில் தேஷ்பாண்டே போன்ற சுமாரான வீரர்களையும் வைத்து தோனி ஐபிஎல் கோப்பைகளை வெல்வதற்கான காரணத்தை பற்றி முன்னாள் வீரர் முகமது கைஃப் வியப்புடன் பேசியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் துஷார் தேஷ்பாண்டேவை பற்றி பேசலாம். குறிப்பாக ஃபைனலில் அதிரடி காட்டிய அஜிங்க்ய ரகானேவின் கேமியோக்களை பற்றியும் பேசலாம்”

- Advertisement -

“இந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பான ரெக்கார்டை வைத்திருக்கவில்லை என்று நான் சொல்வேன். ஆனால் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு செல்லும் போது அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகும். இருப்பினும் தன்னுடைய வீரர்களை ஃபிட்டாக, விழிப்புணர்வுடன் வைத்து நன்றாக விளையாட வைக்கும் ஸ்பெஷலான மருந்து தோனியிடம் இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: அதையே சமாளிக்க முடியல.. நாம இந்தியாவின் தரம்சாலா மைதானத்துக்கு ஆசைப்படலாமா.. வாசிம் அக்ரம் ஆதங்கம்

அதே நிகழ்ச்சியில் இர்பான் பதான் பேசியது பின்வருமாறு. “இம்முறை தீபக் சஹர் காயத்திலிருந்து வருகிறார். இலங்கை அணியில் சமீபத்தில் தடுமாறும் பதிரனாவின் ஃபார்ம் சிறப்பாக இல்லை. டேவோன் கான்வே காயத்தை சந்தித்துள்ளார். இப்படி உங்களுடைய 3 – 4 முக்கிய வீரர்கள் காயமடைந்து நல்ல ஃபார்மில் இல்லாதது அணி நிர்வாகத்திற்கு கடினத்தை ஏற்படும். அது தோனிக்கு சவாலை கொடுக்கும். ஆனால் தோனி மாஸ்டர் மைண்ட் கொண்டவர். ஒவ்வொரு வருடத்தை போலவே இம்முறையும் அதை அவர் சமாளிக்க ஏதாவது செய்வார்” என்று கூறினார்.

Advertisement