அதையே சமாளிக்க முடியல.. நாம இந்தியாவின் தரம்சாலா மைதானத்துக்கு ஆசைப்படலாமா.. வாசிம் அக்ரம் ஆதங்கம்

Wasim Akram 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பின் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா தொடரை வென்று உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

முன்னதாக மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடர் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள அழகான தரம்சாலா மைதானத்தில் நிறைவு பெற்றது. அப்போது அந்தப் போட்டிக்கு நிகராக தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தை பற்றி அனைவரும் பேசினார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் கடல் மட்டத்திலிருந்து 1457 அடிகள் உயரத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தரம்சாலா மிகவும் அழகான மைதானமாகும்.

- Advertisement -

அழகான தரம்சாலா:
குறிப்பாக பின்பகுதிகளில் அழகான பனிமலை சூழ்ந்த அந்த மைதானத்தில் எப்போதுமே குறைவான வெப்பத்துடன் குளிர்ச்சியான வானிலை நிலவும். அங்கே அமர்ந்து தங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டை பார்ப்பது ரசிகர்களுக்கு சொர்க்கத்தைப் போன்ற உணர்வை கொடுக்கும் என்பதால் தரம்சாலா உலகிலேயே மிகவும் அழகான மைதானங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது.

அங்கு இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெற்றதால் தரம்சாலா மைதானம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டாக இருந்தது. அதைப் பார்த்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் நம் நாட்டில் ஏன் இது போன்ற இயற்கை எழில் கொஞ்சம் சூழ்நிலையில் ஒரு புதிய மைதானத்தை அமைக்கக்கூடாது என்று வாசிம் அக்ரமிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஏற்கனவே லாகூர், கராச்சி, கடாபியில் உள்ள 3 மைதானங்களையே நம்மால் சரியாக பராமரிக்க முடியவில்லை என்று வாசிம் அக்ரம் கூறினார்.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தரம்சாலா போன்ற மைதானத்தை உருவாக்க அதிக செலவாகும் என்பதால் அதற்கு நாம் ஆசைப்படலாமா என்று அந்த ரசிகருக்கு பதிலளித்த வாசிம் அக்ரம் மறைமுகமாக பாகிஸ்தான் வாரியத்தையும் விமர்சித்தது பின்வருமாறு. “நாம் தரம்சாலா, குயின்ஸ்டவுன் போன்ற மைதானங்களை பார்த்துள்ளோம். அதைப் பார்த்த பின்பும் பாகிஸ்தான் வாரியம் ஏன் வடக்கு பகுதியில் அது போன்ற மைதானத்தை உருவாக்க முதலீடு செய்யவில்லை? என்று தோன்றுகிறது”

இதையும் படிங்க: சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிர்க்கு போராடும் இலங்கை வீரர் – சோகமடைய வைத்த பரபரப்பு சம்பவம்

“சொல்லப்போனால் நம்மால் ஏற்கனவே உள்ள 3 மைதானங்களையே சரியாக பராமரிக்க முடியவில்லை. பின்னர் எப்படி புதிய ஒன்றை கட்ட முடியும்? ட்ரோன் கேமராவில் காண்பிக்கப்பட்ட ஃகடாபி மைதானத்தின் கூடரையை நீங்கள் பார்த்தீர்களா? நம்மால் ஏற்கனவே உள்ள 3 மைதானங்களை சமாளிக்க முடியவில்லை. அதனால் புதிய மைதானத்தை பற்றி நாம் கனவு மட்டுமே காண முடியும். இருப்பினும் அபொதாபாத் மிகவும் அழகான மைதானமாகும்” என்று கூறினார்.

Advertisement