சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிர்க்கு போராடும் இலங்கை வீரர் – சோகமடைய வைத்த பரபரப்பு சம்பவம்

SL
- Advertisement -

இலங்கையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள செய்தி தற்போது இணையத்தில் அதிவேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலங்கை அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான லஹிரு திரிமன்னே இதுவரை அந்த அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகள், 127 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

மூன்று வகையான இலங்கை அணியிலும் இடம்பெற்று விளையாடி வந்த திரிமன்னே கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர். அதோடு மட்டுமில்லாமல் இரண்டு முறை இலங்கை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போதும் அந்த அணியில் இடம் பிடித்து விளையாடி இருந்தார்.

- Advertisement -

தற்போது 34 வயதாகும் திரிமன்னே கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் தொடர்பான பணிகளையே மேற்கொண்டு வரும் அவர் இலங்கையில் உள்ள அருணாநாதபுரம் என்கிற பகுதியில் காரில் நண்பர்களுடன் யாத்திரைக்கு சென்றபோது எதிரே வந்த லாரியின் மீது அவரது கார் மோதி இருக்கிறது.

இதனால் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். தற்போது ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள் நிச்சயம் அவரை காப்பாற்றி விடலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

கடந்த 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எவ்வித போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்த வேளையில் கடந்த ஜூலை மாதம் தான் ஓய்வினையும் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டது குறித்த செய்தி வெளியானதில் இருந்து இலங்கை ரசிகர்கள் பலரும் அவர் மீண்டும் வரவேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : தோனியின் சென்னைக்கு – கில் தலைமையிலான குஜராத் சவால் கொடுக்குமா?புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் வீரர்கள் பலர் விபத்தில் சிக்குவது தொடர்வது வாடிக்கையாகியுள்ள வேளையில் ரிஷப் பண்டிற்கு அடுத்து தற்போது திரிமன்னே மிகவும் மோசமான விபத்தினை சந்தித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரபல ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரு சைமன்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement