ஐபிஎல் 2024 : தோனியின் சென்னைக்கு – கில் தலைமையிலான குஜராத் சவால் கொடுக்குமா?புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்கி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வென்று 2011 போல சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கு சவாலை கொடுக்கும் எதிரணிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கடந்த 2021இல் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி முதல் வருடத்திலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பையை வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இருப்பினும் கடந்த வருடம் சென்னையிடம் ஃபைனலில் தோல்வியை சந்தித்த அந்த அணிக்கு தற்போது ஹர்திக் பாண்டியா கேப்டனாக இல்லை என்பது பின்னடைவாகும். ஏனெனில் இளம் வீரர் சுப்மன் கில் இந்தியாவின் வருங்கால சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்பட்டாலும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாதவர்.

- Advertisement -

சென்னை – குஜராத்:
எனவே கடந்த முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அசத்துவதைத் தாண்டி ஜடேஜா, மயங் அகர்வால் போல் அல்லாமல் கேப்டன்ஷிப் அழுத்தத்தை சமாளித்து அணியை சிறப்பாக வழி நடத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே சமயம் ஆஸ்திரேலியாவின் மேத்தியூ வேட் விலகினாலும் கடந்த வருடம் அசத்திய ரிதிமான் சஹா மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் டாப் ஆடரில் குஜராத்துக்கு வலு செய்கின்றனர்.

அதே போல மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் பின்னடைவை ஏற்படுத்தினாலும் நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் இம்முறை காயத்திலிருந்து குணமடைந்து மிடில் ஆர்டரை வலுப்படுத்துவார் என்று நம்பலாம். அவருடன் அபினவ் மனோகர், ஆப்கானிஸ்தானின் ஓமர்சாய் ஆகியோர் நல்ல திறமையுடைய வீரர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

அதை விட டேவிட் மில்லர், 7.40 கோடிக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள தமிழக வீரர் சாருக்கான், ராகுல் திவாட்டியா ஆகியோர் வெற்றியை எதிரணியிடமிருந்து பறிக்கும் அளவுக்கு திறமை கொண்ட ஃபினிஷர்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படியே சுழல் பந்து வீச்சு துறையில் பேட்டிங்கிலும் தெறிக்க விடக்கூடிய ரஷித் கானுடன் சேர்ந்து நூர் அஹ்மத், தமிழக வீரர் சாய் கிஷோர் ஆகியோர் இருப்பது குஜராத்தின் பாடமாகும்.

ஆனால் வேகப்பந்து வீச்சு துறையில் கடந்த வருடம் ஊதா தொப்பியை வென்ற முகமது ஷமி முறை காயத்தால் விலகியது குஜராத்துக்கு பின்னடவாகும். எனவே அந்த இடத்தை மோகித் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற மூத்த இந்திய வீரர்களும் ஸ்பென்சர் ஜான்சன், ஜோஸ் லிட்டில் போன்ற வெளிநாட்டு வீரர்களும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

- Advertisement -

மறுபுறம் சென்னை அணியில் காயமடைந்த டேவோன் கான்வே இடத்தை நிரப்ப தயாராக உள்ள ரச்சின் ரவீந்திராவுடன் நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் ஓப்பனங்கில் அசத்தத் தயாராக உள்ளார். அப்படியே மிடில் ஆர்டரில் ஓய்வு பெற்ற ராயுடுவின் இடத்தை புதிதாக 14 கோடிக்கு வாங்கப்பட்ட டார்ல் மிட்சேல் நிரப்பக்கூடிய தரமான வீரராக உள்ளார். அவருடன் ரகானே, மொய்ன் அலி ஆகியோர் மிடில் ஆர்டரில் வலு சேர்க்கும் அளவுக்கு தரத்தையும் அனுபவத்தையும் கொண்டிருக்கின்றனர்.

லோயர் மிடில் ஆர்டரில் கடந்த வருடம் அபாரமாக விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ள சிவம் துபே, நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜாவுடன் கேப்டன் எம்எஸ் தோனி ஃபினிஷராக அசத்தக்கூடியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே போல மஹீஸ் தீக்சனாவுடன் பேட்டிங்கில் அசத்தக்கூடிய ஜடேஜா, மொய்ன் அலி, மிட்சேல் சான்ட்னர் ஆகியோர் சுழல் பந்து வீச்சு துறையை பலப்படுத்துகிறார்கள். வேகப்பந்து வீச்சு துறைக்கு தீபக் சஹார், மீண்டும் சென்னைக்கு வந்துள்ள சர்துள் தாகூர், குட்டி மலிங்கா என்றழைக்கப்படும் பதிரானா, வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற ஓரளவு தரமுடைய வீரர்கள் வலு சேர்க்கின்றனர்.

- Advertisement -

தேவைப்படும் நேரத்தில் டார்ல் மிட்சேல், சிவம் துபே ஆகியோர் பேட்டிங்கிலும் தாக்கூர், சஹால் ஆகியோர் பவுலிங்கிலும் அசத்தும் திறமையை கொண்டுள்ளது சென்னைக்கு கூடுதல் பலமாகும். அது போக புதிதாக வாங்கப்பட்டுள்ள சமர் ரிஸ்வியுடன் கடந்த சீசன்களில் அசத்திய முகேஷ் சௌத்ரி, ராஜ்வர்தன், துசார் தேஷ்பாண்டே போன்ற இளம் வீரர்களும் வாய்ப்பு கிடைத்தால் அசத்துவதற்காக தயாராகவே உள்ளனர்.

இதையும் படிங்க: ஏரோப்பிளேன் மாதிரி பறக்க முடியாது.. பஸ்பால் தோல்வியடைந்த காரணத்தை விளக்கி.. வெற்றிக்கான ஹிண்ட் கொடுத்த அஸ்வின்

மொத்தத்தில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத சுப்மன் கில் தலைமையில் சில முக்கிய வீரர்கள் இல்லாத குஜராத் அணியை கேப்டன்களின் இமயமாக நிற்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை தோற்கடித்து 6வது கோப்பையை வெல்லும் அளவுக்கு தேவையான பலத்தைக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் குஜராத் 3 வெற்றிகளையும் சென்னை 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

Advertisement