ஏரோப்பிளேன் மாதிரி பறக்க முடியாது.. பஸ்பால் தோல்வியடைந்த காரணத்தை விளக்கி.. வெற்றிக்கான ஹிண்ட் கொடுத்த அஸ்வின்

Ashwin and Ben Stokes
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. அந்த டெஸ்ட் தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி வெல்வோம் என்று ஒற்றைக்காலில் நின்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரின் “பஸ்பால்” அணுகுமுறை தான் இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதைப் பின்பற்றி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வி இங்கிலாந்து பதிவு செய்ததால் “பஸ்பால்” அணுகுமுறை நிறைவு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பஸ்பால் அணுகுமுறை இந்தியாவில் ஏன் தோல்வியை சந்தித்தது என்பதற்கான காரணம் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். மேலும் அது வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான சிறிய மாற்றத்தைப் பற்றியும் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பஸ்பால் அணுகுமுறை:
“பலரும் 1 – 4 என்ற கணக்கில் இங்கிலாந்து தோற்றதாக சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை இத்தொடரில் நாங்கள் மிகப்பெரிய அழுத்தத்தை தாண்டியே வந்தோம். ஒருவேளை அணி சரியான சமநிலையை கையாண்டால் வெற்றி கிடைக்கும். டெஸ்ட் அல்லது எந்த வகையான கிரிக்கெட்டிலும் நீங்கள் விமானம் போல உடனடியாக பறக்க முடியாது. குறிப்பாக நாம் புறப்படும் வரை பெடலை மிதித்து முடுக்கி விட முடியாது”

“அது நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுவதற்கு சமம். சில நேரங்களில் இங்கிலாந்தில் அவர்கள் அப்படி வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதற்காகவா? இப்படி செய்கிறார்களா என்று நான் நினைப்பேன். அதாவது இங்கிலாந்தின் சாலையில் இடையில் யாரும் வர மாட்டார்கள் என்பதால் வேகமாக வாகனம் ஓட்டுவதில் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரே பாதையில் தொடர்ந்து ஓட்டலாம். இடது புறத்தில் முந்த முடியாது. அதன் காரணமாக எதிர்பாராத ஒன்றை அவர்கள் பார்த்தால் குழப்பமடைந்து செயலிழக்கிறார்கள்”

- Advertisement -

“ஒருவேளை அவர்கள் இந்தியாவில் நாங்கள் எப்படி வாகனம் ஓட்டுகிறோம் என்பதை பார்த்தால் குழம்புவார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. நீங்கள் இந்தியாவில் எப்போதும் 4வது கியரில் வண்டியை ஓட்ட முடியாது. தொடர்ந்து கியர்களை மாற்ற வேண்டும். அதனால் நாம் எப்போதும் ஒரு காலை பிரேக் மீது வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த அணுகுமுறை இங்கிலாந்தை சேர்ந்தவர்களுக்கு ஏலியன் கதையை போல் இருக்கும். ஜாக் கிராவ்லி ஒவ்வொரு முறையும் நல்ல துவக்கத்தை பெற்றாலும் அதை தொடர முடியவில்லை”

“பஸ்பால் என்பது அழுத்தத்தை எதிரணி மீது மாற்றுவதைப் பற்றியது. ஆனால் அழுத்தத்தை மாற்றியதும் என்ன நடக்கும்? அது போன்ற சமயத்தில் “இப்போது எதிரணி இதற்கான விலையை கொடுக்க வேண்டும்” என்ற வகையில் இங்கிலாந்து அணியினர் செயல்பட வேண்டும். எனவே அதை மட்டும் இங்கிலாந்து சரியாக செய்தால் போட்டி சமமாக இருக்கும்”

இதையும் படிங்க: அவரோட தலையை பாருங்க.. அது இப்படியே இருந்தா ஜெய்ஸ்வால் வேற லெவலில் வருவாரு.. ரிஷப் பண்ட்

“உண்மையாகவே எங்களிடம் அனுபவமற்ற வீரர்கள் இருந்ததால் இந்த தொடர் இங்கிலாந்து வழியில் சென்றிருக்கும். இங்கே வருவதற்கு முன்பாக 0 – 2 என்று என் தங்கியிருந்த இங்கிலாந்து கடைசியில் ஆஷஸ் தொடரை 2 – 2 என சமன் செய்தது. அவர்கள் பாகிஸ்தானை சொந்த மண்ணில் துவம்சம் செய்தனர். ஆனால் இந்திய தொடர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து அணியினர் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்” என்று கூறினார்.

Advertisement