அவரோட தலையை பாருங்க.. அது இப்படியே இருந்தா ஜெய்ஸ்வால் வேற லெவலில் வருவாரு.. ரிஷப் பண்ட்

Rishabh Pant 2
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் 400 ரன்கள் அடித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு உதவிய அவர் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்டார்.

அங்கே கடந்த வருடம் அதிவேகமான அரை சதமடித்து 625 ரன்கள் குவித்த அவர் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனை படைத்தார். அதன் காரணமாக கடந்த 2023 ஜூலை மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினர்.

- Advertisement -

ரிஷப் பண்ட் பாராட்டு:
அதைத் தொடர்ந்து சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாக் அவுட் போட்டியில் சதமடித்த அவர் அந்தத் தொடரில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்கு உதவினார். அதன் பின் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிம்ம சொப்பனமாக செயல்பட்ட அவர் 712 ரன்கள் குவித்து 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் தாம் இல்லாத சமயத்தில் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக கிடைக்கும் வாய்ப்பில் அசத்துவதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அதை விட இளம் வயதிலேயே கிடைக்கும் அதிகப்படியான பாராட்டுகளுக்கு மயங்காமல் தொடர்ந்து தன்னுடைய தலையை ஒரே மாதிரியாக வைத்து விளையாடும் அவருடைய குணமும் மிகச் சிறப்பாக உள்ளதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே இதே போல விளையாடும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் இன்னும் நீண்ட தூரம் பயணித்து இந்தியாவுக்காக பெரிய அளவில் சாதிப்பார் என்று பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இளம் வீரர்கள் காலடி வைத்து முன்னோக்கி செல்லும் விதத்தை பார்ப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் ஒரு காலத்தில் சில புதிய வீரர்கள் அணிக்குள் வருவார்கள் என்பது உங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க: பாண்டியாவும், பும்ராவும் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளா இருக்குறதுக்கு காரணமே அவர் ஒருத்தர் தான் – பார்த்திவ் படேல் கருத்து

“ஆனால் அனைத்து நேரமும் புதிதாக வரும் வீரர்கள் அசத்துவதை நீங்கள் பார்க்க முடியாது. அதே சமயம் அவர்கள் சிறப்பாக செயல்படும் போது அதிகமாக யோசிக்காமல் தலையை கீழே குனிந்து நடக்க வேண்டும். அந்த வகையில் ஜெயஸ்வால் போன்றவர் தொடர்ந்து தலையை குனிய வைத்துக்கொண்டு தாம் செய்வதை சிறப்பாக செய்து கொண்டே இருப்பவர். அவர் அதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் இன்னும் நீண்ட தூரம் செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement