- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோத்தா ரசிகர்கள் மீம்ஸ் போட்டே வீட்டுக்கு அனுப்பிருப்பாங்க.. ஆனா கம்பீரின் அந்த முடிவு சூப்பர் தான்.. கைப் பாராட்டு

இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடின. 25 நாட்களும் முழுமையாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அத்தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக கடைசி போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றியைப் பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. இந்நிலையில் ஒருவேளை ஓவல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் ரசிகர்கள் மீம்ஸ் போட்டே கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள் என்று முகமது ஃகைப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கம்பீரின் விடாப்பிடி முடிவு:

குறிப்பாக குல்தீப் யாதவை ஒரு போட்டியில் கூட விளையாட வைக்காததற்காக கௌதம் கம்பீர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அவருக்கு பதிலாக கம்பீர் விளையாட வைத்த சுந்தர் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி இந்தியாவை 6 ரன்னில் வெற்றி பெற உதவியதாகவும் ஃகைப் பாராட்டியுள்ளார். இது பற்றி ஃகைப் பேசியது பின்வருமாறு.

“கௌதம் கம்பீர் மேலே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அதிக அழுத்தம் இருந்தது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் அவர் வெற்றிகரமாக இல்லை. ஒருவேளை ஓவல் போட்டியில் இந்தியா தோற்றால் அவரை விமர்சிக்க இந்தியாவில் பலரும் காத்திருந்தார்கள். சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு அவரை மோசமாகப் பேச ரசிகர்கள் காத்திருந்தனர். ஒருவேளை இந்தியா தோற்றிருந்தால் அதுவே பயிற்சியாளராக கம்பீரின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருந்திருக்கலாம்”

- Advertisement -

ஃகைப் பாராட்டு:

“அந்தளவுக்கு அழுத்தத்தைத் தாங்கி வெற்றி கண்ட அவரை நாம் மனதாரப் பாராட்ட வேண்டும். பும்ரா இடத்தில் குல்தீப் விளையாட வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னோம். ஆனால் கம்பீர் பேட்டிங் ஆழத்தை அதிகப்படுத்தும் முடிவில் உறுதியாக இருந்தார். 8வது இடம் வரை பேட்டிங் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியது சரியாக நிரூபணமாகியுள்ளது”

இதையும் படிங்க: அந்த வார்த்தையை டிஸ்னரியில் இருந்து சிராஜ் தூக்கிட்டாரு.. அவரை பாத்து கத்துக்கோங்க – கவாஸ்கர் பாராட்டு

“ஏனெனில் நாம் வெற்றி பெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா மற்றும் சுந்தரின் செயல்பாடுகளைப் பாருங்கள். பேட்டிங்கில் ஆழம் இருந்ததாலேயே நம்மால் பெரிய ரன்கள் குவித்து தொடரை சமன் செய்ய முடிந்தது. எனவே அது நல்ல முடிவாக அமைந்தது. கெளதம் கம்பீர் இளம் அணியுடன் இருக்கிறார். அவர் மீது எவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்” என கூறினார்.

- Advertisement -