அந்த வார்த்தையை டிஸ்னரியில் இருந்து சிராஜ் தூக்கிட்டாரு.. அவரை பாத்து கத்துக்கோங்க – கவாஸ்கர் பாராட்டு

Sunil Gavaskar and Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரராக முதல் இடத்தை பிடித்து அசத்தினார்.

முகமது சிராஜை பாராட்டிய சுனில் கவாஸ்கர் :

இந்த டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இரண்டு போட்டிகளில் ஓய்வெடுத்த வேளையில் முகமது சிராஜ் ஒரு போட்டியில் கூட ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 1113 பந்துகளை வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் சிராஜ் நிகழ்த்தியுள்ளார். பணிச்சுமை காரணமாக வீரர்கள் அவ்வப்போது ஓய்வெடுத்து வரும் வேளையில் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடும் முகமது சிராஜின் இந்த செயல்பாட்டை பல்வேறு முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய முகமது சிராஜை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அப்படி அவர் கூறியதாவது : இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவது என்பது மிகப்பெரிய கௌரவம்.

- Advertisement -

140 கோடி மக்களில் ஒருவராக நாட்டை முன்னிலைப்படுத்தி விளையாடும் வாய்ப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள். முகமது சிராஜின் எனர்ஜி மற்றும் அர்ப்பணிப்பு என்பது அளவிட முடியாத ஒன்று. இந்திய அணிக்காக அவர் ஒவ்வொரு பந்தையும் முழு மூச்சுடன் வீசுகிறார். அவருடைய ஈடுபாடு எந்தவொரு இடத்திலும் குறையாமல் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : நம்பர் ஒன் பும்ராவால் செய்ய முடியாததை சிராஜ் செஞ்சுருக்காரு.. விட்டதை பிடிச்சுருக்காரு.. ஹாடின் பாராட்டு

இந்த தொடரில் அவர் ஓய்வின்றி விளையாடியதன் மூலம் பணிச்சுமை என்கிற வார்த்தையையே அகராதியில் இருந்து நீக்கிவிட்டார். இனி இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்து இந்த “பணிச்சுமை” என்கிற வார்த்தை முற்றிலுமாக நீக்கப்படும் என்று நம்புகிறேன் என முகமது சிராஜின் அர்ப்பணிப்பை சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

Advertisement