நம்பர் ஒன் பும்ராவால் செய்ய முடியாததை சிராஜ் செஞ்சுருக்காரு.. விட்டதை பிடிச்சுருக்காரு.. ஹாடின் பாராட்டு

Brad haddin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையில் விளையாடியது. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற அத்தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றியில் பெற்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்து மொத்தமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்தப் போட்டியில் 4வது நாளில் ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்சை பிடித்த சிராஜ் பவுண்டரி எல்லையில் காலை வைத்ததால் சிக்ஸராக மாறியது.

- Advertisement -

பும்ராவால் முடியாததை:

அதைப் பயன்படுத்திய ஹாரி ப்ரூக் 111 (98) ரன்கள் அடித்து இந்தியாவுக்கு கிட்டத்தட்ட தோல்வியைக் கொடுத்தார். இருப்பினும் அதற்காக அசராத சிராஜ் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து அனைவரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ராவால் இத்தொடரில் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற வைக்க முடியவில்லையென ஆஸ்திரேலியாவின் ப்ராட் ஹாடின் கூறியுள்ளார்.

ஆனால் முகமது சிராஜ் இந்திய அணிக்கு 2 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ஹாரி ப்ரூக் கேட்ச் விட்டதால் கைமீறிய வெற்றியை சிராஜ் மீண்டும் பெற்றுக்கொடுத்தது குறித்தும் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவால் பும்ரா இல்லாமலேயே விளையாடி வெற்றி காண முடியும். மற்ற பவுலர்கள் வெற்றியைக் காணும் வழியைக் கண்டறிந்தால் பும்ராவின் வாழ்க்கை செல்லலாம்”

- Advertisement -

செய்த சிராஜ்க்கு பாராட்டு:

“இந்தியாவில் நிறைய திறமை இருக்கிறது. ஆனால் பும்ரா இத்தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. சிராஜ் இந்திய பவுலிங் அட்டாக்கின் தலைவரைப் போல் செயல்பட்டார் என்று நினைக்கிறேன். அவர் பெரிய சூழ்நிலைகளில் பந்தை வீசக்கூடிய பவுலர்களில் ஒருவர். ஆம் அவர் தவறுகளை செய்வார். ஆனால் அதற்காக எந்த சூழ்நிலைகளிலிருந்தும் தப்பித்து ஓடமாட்டார்”

இதையும் படிங்க: பஸ்பால் இங்கிலாந்தின் வெற்றியை அமைதியால் சமாளிச்சுருக்காரு.. கில் பேட்டிங், கேப்டன்ஷிப் குறித்து சச்சின்

“உங்களிடம் தவறு செய்வதற்கு பயப்படாத வீரர்கள் இருந்தால், அவர்கள் எதிரணிக்கு அடிபணியாதவர்களாக இருப்பார்கள். அது போன்ற வீரர்களையே நீங்கள் விரும்புவீர்கள். 4வது நாளின் கடைசி மணி நேரத்தில் சிராஜ் பவுலிங் செய்ய விரும்பினார். வெல்வதற்காக அவர் ஒவ்வொரு ஓவரையும் வீச விரும்பாமல் இருந்ததில்லை. அவர் கேட்ச்சை விட்டார். ஆனால் அதுவும் அவரை போட்டியில் வரையறுக்கவில்லை. வென்றதால் அந்த கேட்ச் பற்றி இனிமேல் யாரும் பேசப்போவதில்லை” என்று கூறினார்.

Advertisement