பஸ்பால் இங்கிலாந்தின் வெற்றியை அமைதியால் சமாளிச்சுருக்காரு.. கில் பேட்டிங், கேப்டன்ஷிப் குறித்து சச்சின்

Sachin Tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மிராக்கள் வெற்றி பெற்று ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்துடன் பகிர்ந்து கொண்டது. முன்னதாக இத்தொடரில் விராட், ரோஹித் இல்லாததால் இந்தியா தோற்கும் என்று பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தனர்.

அதே போல சுப்மன் கில் வெளிநாட்டுப் போட்டியில் பிளேயிங் லெவனில் விளையாடவே தகுதியற்றவர் என்று கேப்டனாக நியமிக்கப்பட்ட போது விமர்சனங்கள் வந்தன. ஆனால் அந்த இரண்டையுமே கில் தலைமையிலான இந்திய அணி தற்போது உடைத்துள்ளது. குறிப்பாக கில் 754 ரன்கள் அடித்து உலக சாதனைகளைப் புரிந்து விமர்சனங்களை உடைத்துள்ளார்.

- Advertisement -

அதிரடியான இங்கிலாந்து:

இந்நிலையில் சுப்மன் கில் தனது அறிமுகத் தொடரிலேயே பஸ்பால் ஸ்டைலில் அதிரடியாக விளையாடக்கூடிய இங்கிலாந்தை அமைதியான கேப்டன்ஷிப்பால் சமாளித்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி ரெடிட் இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ஒட்டுமொத்தமாக இது சிறப்பான முடிவு. 2 – 2 என்று முடிந்த இத்தொடர் வித்தியாசமாக இருந்திருக்கும்”

“ஆனால் கிரிக்கெட்டில் அப்படி நடந்திருந்தால், இப்படி நடந்திருந்தால் என்ற பேச்சுக்கு இடமில்லை. பவுலர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள், எவ்வளவு கட்டுக்கோப்புடன் வீசுகிறார்கள், எவ்வளவு நேரத்தில் திட்டத்தைப் பின்பற்றி வீசுகிறார்கள் என்பது போன்ற நிறைய விஷயங்களை கேப்டன் நிர்வாகிக்க வேண்டும். சில நேரங்களில் திட்டம் செயல்படாமல் போனால் பவுலர்கள் வேறு விஷயங்களை சோதிப்பார்கள்”

- Advertisement -

அமைதியாக சமாளித்த கில்:

“அப்போது தான் கேப்டன் ரன்களை கட்டுப்படுத்த களத்தில் இருக்கும் ஃபீல்டர்கள் போதவில்லை என்று உணர்வார். அது போன்ற சூழ்நிலைகளிலும் கில் பொறுமை மற்றும் அமைதியுடன் இருந்தார். ஆனால் பார்ட்னர்ஷிப் அமைக்கப்படும் போது எப்பேர்ப்பட்ட கேப்டனுக்கும் சூழ்நிலை கடினமாகும். ஏனெனில் அப்போது ரன்களை கட்டுப்படுத்துவதே அவர்களுடைய முதல் வேலையாக இருக்கும்”

“ஒட்டுமொத்தமாக கில் அணியை நன்றாக கட்டுப்படுத்தியதாக நான் உணர்ந்தேன். சில இடங்களில் முன்னேற்றங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் தனது அறிமுகத் தொடரிலேயே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் அட்டாக் செய்யும் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். இங்கிலாந்து அளவுக்கு உலகின் வேறு அணிகள் இவ்வளவு அதிரடியாக பேட்டிங் செய்யும் என்று நான் நினைக்கவில்லை”

இதையும் படிங்க: வெல்டன் சுந்தர்.. இதான் இங்கிலாந்தின் நேர்மையா? இந்தியாவுக்கு நான் 100% சப்போர்ட் பண்றேன்.. சச்சின் பதிலடி

“சுப்மன் தொடர் முழுவதுமே அமைதி, பொறுமையுடன் சிறப்பாக பேட்டிங் செய்தார். உங்களிடம் தெளிவான திட்டமும் தரமும் இருக்கும் போது அது உங்களுடைய ஃபுட் வொர்க்கில் எதிரொளிக்கும். அதை சிறப்பாக கொண்டிருந்த அவர் நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விளையாடினார். பந்துகளை நன்றாக விட்டு விளையாடிய அவருடைய ஷாட் செலக்சன் துல்லியமானதாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement