எப்போ தான் அதுல முன்னேறுவீங்க.. இப்படியே போனா கண்டிப்பா 2023 உ.கோ தவற விட்ருவோம் – வென்றும் இந்திய அணி பற்றி கைப் கவலை

Mohammed Kaif
- Advertisement -

ஆசிய கோப்பையில் 8வது முறையாக வெற்றி வாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அத்துடன் இந்த வெற்றியால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் ஒரே சமயத்தில் முதலிடம் பிடித்த முதல் ஆசிய அணி என்ற சரித்திரமும் இந்தியா படைத்துள்ளது.

அத்துடன் காயத்திலிருந்து குணமடைந்த ஜஸ்பிரித், கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். அதே போல கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடது கை பவுலர்களுக்கு எதிராக தடுமாறிய கதையை 2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் சாகின் அப்ரிடியை சிறப்பாக எதிர்கொண்டு ஓரளவு சரி செய்து ஃபார்மில் இருக்கின்றனர்.

- Advertisement -

கைப் கவலை:
மேலும் முதன்மை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் தொடர் நாயகன் விருது வென்று அசத்திய நிலையில் சுப்மன் கில், இஷான் கிசான் 3 இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றனர். ஆனாலும் ஃபீல்டிங் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய கேட்ச்சுகளை பிடிப்பதில் மட்டும் இந்திய அணியினர் இன்னும் முன்னேறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

ஏனெனில் 2023 கோப்பையில் கத்துக்குட்டி நேபாளுக்கு எதிரான லீக் போட்டியில் முதல் 15 பந்துகளில் 3 எளிதான கேட்ச்களை விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிசான் ஆகியோர் கோட்டை விட்டனர். அந்த நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் 14 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்சை ஸ்ரேயாஸ் ஐயர் தவற விட்டதை பயன்படுத்திய டேவிட் வார்னர் 54 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் நிச்சயமாக வார்னர் எக்ஸ்ட்ரா ரன்களை அடித்ததற்கு வழி வகுத்த ஸ்ரேயாஸ் ஐயர் கோட்டை விட்ட கேட்ச் முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் பேட்டிங், பவுலிங் துறையில் சிறப்பாக செயல்பட்டும் கேட்ச்களை பிடிக்கவில்லை என்றால் இந்தியா 2023 கோப்பையை தவற விடலாம் என்று முன்னாள் இந்திய சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான முகமது கைஃப் கவலை தெரிவித்து ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: நம்ம பையன் ஆடுறத பாத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கத்துக்கனும். இந்திய இளம்வீரரை புகழ்ந்த – ஹர்பஜன் சிங்

“எச்சரிக்கை: இந்தியா கேட்ச்களை சரியாகப் பிடிக்கவில்லை என்றால் உலகக் கோப்பையை தவற விடலாம். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் போட்டிகளில் வெற்றி பெறலாம். ஆனால் கேட்ச்களையும் பிடித்தால் தான் வெற்றிக்கான முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 1999 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் கொடுத்த கேட்ச்சை ஹெர்சல் கிப்ஸ் நழுவ விட்டதால் தென்னாப்பிரிக்கா கோப்பையை கோட்டை விட்டதாக இன்றும் அனைவராலும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement