நம்ம பையன் ஆடுறத பாத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கத்துக்கனும். இந்திய இளம்வீரரை புகழ்ந்த – ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே செப்டம்பர் 22-ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது செப்டம்பர் 24-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது போட்டியில் சொந்த மைதானத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை இளம் இந்திய வீரர் ஆஸ்திரேலியா அணிக்கு பாடம் புகட்டியுள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில் தனது ஹோம் கிரவுண்டில் எவ்வாறு விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார் என்றே கூறுவேன். ஏனெனில் அந்த அளவிற்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் இந்த போட்டியில் வெளிப்படுத்தி 74 ரன்கள் குவித்திருந்தார்.

அதிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் அற்புதமாக இருந்தது. அதோடு வேகப்பந்து வீச்சாளர்களையும், ஸ்பின்னர்களையும் அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. அவரோடு மட்டும் இல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட்டையும் நாம் பாராட்டியாக வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் இதுபோன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக ஒரு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் வந்து இப்படி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவ்வளவு எளிது கிடையாது. அந்த அளவிற்கு ருதுராஜ் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர்கள் இருவரும் அமைத்த பாட்னர்ஷிப் அணியின் வெற்றியை எளிதாக்கியது என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

இதையும் படிங்க : ஏசியன் கேம்ஸ் 2023 : 5 டக் அவுட்.. நாக் அவுட்டில் 51 ரன்னுக்கு வங்கதேசத்தை சுருட்டி பழி தீர்த்த இந்திய அணிக்கு வெள்ளி உறுதி.. ஃபைனலில் மோதுவது யார்?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஏற்கனவே கூறியது போன்று சூரியகுமார் யாதவால் ஆறாவது இடத்தில் களமிறங்கி போட்டியை முடித்து கொடுக்க முடியும். அதைத்தான் இந்த போட்டியிலும் செய்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அவர் பேட்டிங்கில் எவ்வளவு பின்னால் வந்தாலும் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என ஹர்பஜன் கூறினார்.

Advertisement