- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பும்ரா இல்ல.. ரோஹித்துக்கு பின் அவரை கேப்டனா போடுங்க.. ஜாம்பவானா வருவாரு.. கைப் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் முழுமையாக ஒரு ஒயிட் வாஸ் தோல்வியையும் இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தத் தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.

இந்த தோல்வியால் வரும் காலங்களில் மூத்த வீரர்களை பிசிசிஐ கழற்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 37 வயதில் தொட்டுள்ள ரோஹித் சர்மா ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார். தற்போது இந்த தோல்வியால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடுத்த வருடம் ஓய்வு பெறுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது.

- Advertisement -

அடுத்த கேப்டன்:

அது போன்ற சூழ்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஓய்வு பெறும் போது ஜாம்பவானாக விடைபெறுவார் என்று முன்னாள் வீரர் முகமது கைப் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“தற்போதைய அணியில் ரிஷப் பண்ட் மட்டுமே டெஸ்ட் கேப்டனாக வருவதற்கு தகுதியானவராக உள்ளார். விளையாடும் போதெல்லாம் அவர் அதற்கு தகுதியானவர் என்பதை இந்திய அணியை முன்னிறுத்தி காண்பித்துள்ளார். எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் அவர் மேட்ச் வின்னிங் செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அவர் ரன்கள் குவித்துள்ளார்”

- Advertisement -

கேப்டன் ரிஷப் பண்ட்:

“வேகம் அல்லது சுழல் ஆகிய அனைத்து வகையான மைதானங்களிலும் அவர் அசத்தும் முழுமையான பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ரிஷப் பண்ட் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது ஜாம்பவானாக விடை பெறுவார் என்பதை இப்போதே காண்பித்துள்ளார். அவருடைய விக்கெட் கீப்பிங் பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. அவர் களத்தில் இருந்த வரை நான் நியூசிலாந்து எளிதாக மூச்சு விடவில்லை”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு மட்டும் ஒரு ரூல்ஸா? வெற்றியை பறித்த அம்பயர் மீது கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தி

“எனவே தற்போதைய வீரர்களில் வருங்கால கேப்டனை நீங்கள் தேடினால் ரோகித் சர்மாவுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் சிறந்தவர் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் ரோஹித்துக்கு பின் 25 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்றால் மிகையாகாது.

- Advertisement -