IND vs SL : ரொம்ப ட்ரை பண்ணேன். ஆனா என்னால முடியல – ஆதங்கத்தை வெளிப்படுத்திய முகமது சிராஜ்

Mohammad-Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற கடைசி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாவது போட்டியிலும் 317 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த ஒருநாள் தொடரை (3-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

IND vs SL Suryakumar Washington Sundar

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரரான சுப்மன் கில் 116 ரன்களையும், விராட் கோலி 166 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 391 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 73 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 10 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 32 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார்.

Siraj

அவரது சிறப்பான பந்துவீச்சுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டி முடிந்து பாராட்டுகளை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறுகையில் :

- Advertisement -

நான் ஒருநாள் கிரிக்கெட்டில் என்னுடைய முதல் ஐந்து விக்கெட்டை எடுக்க மிகவும் முயற்சி செய்தேன். ஆனால் கடைசியில் அதை என்னால் எட்ட முடியவில்லை. எது நடக்க இருக்கிறதோ அதுதான் நடக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் நான் ஐந்து விக்கெட் எடுக்க முயற்சித்தாலும் அது நடைபெறாமல் போனது.

இதையும் படிங்க : வீடியோ : என்னப்பா நீயெல்லாம் இப்டி பவுலிங் போடுற – இந்திய வீரரை கலாய்க்கும் வகையில் ஜாலியாக சிரித்த விராட் கோலி

இருந்தாலும் நான் இனிவரும் போட்டிகளில் அதனை கைப்பற்ற முயற்சிப்பேன். தற்போது என்னுடைய பந்துவீச்சில் அவுட் ஸ்விங் டெலிவரிகளில் நிறைய பயிற்சி எடுத்து வருகிறேன். விக்கெட்டை எடுப்பதற்காக கேப்டன் என்னை நம்புகிறார். அந்த வகையில் நான் அணிக்காகவும், கேப்டன் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகாகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement