- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை : 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் ரிசர்வ் வீரராக – தேர்வு செயயப்பட்டது ஏன்?

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரானது ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இன்னும் சில தினங்களில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் துவங்க உள்ளன. இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சி போட்டிகளில் பங்கேற்று வரும் வேளையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக அணியில் விளையாடப் போகும் யார் என்ற கேள்வி பெருமளவில் நிலவி வந்தது.

இந்நிலையில் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன்மை அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். அதே வேளையில் நடைபெற்ற முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் பேக் அப் வீரர்களாக சேர்க்கப்பட்டனர். இதனை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா சென்றடைந்த இருவரும் இந்திய அணியுடன் இணைந்து பிரிஸ்பேனில் நடைபெற உள்ள பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 28 வயதான இளம் வீரர் முகமது சிராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாக இருந்தாலும் இதுவரை 6 போட்டியில் மட்டுமே பங்கேற்று ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரை இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ரிசர்வ் வீரராக இந்திய அணி சேர்த்தது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முகமது சிராஜ் இந்த உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட என்ன காரணம் என்பது குறித்த தகவலை தான் இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.

அதன்படி முகமது சிராஜ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். பும்ரா இல்லாத அந்த தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அணியை தலைமை தாங்கி பந்துவீச்சில் வழி நடத்திய முகமது சிராஜ் அந்த தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதோடு இன்னும் சில போட்டிகளிலும் அவர் ஆஸ்திரேலியா மண்ணில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். அதோடு இந்தியாவில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த முகமது சிராஜ் பவர்பிளே ஓவர்களிலேயே அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ’யில் அந்த டீமுக்கு எதிராக 200 ரன்கள் அடிப்பது கஷ்டம் – காரணத்தை விளக்கும் அபினவ் முகுந்த்

கடந்த ஓராண்டில் பவர்பிளே ஓவர்களில் அதிகபட்சமாக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்பதனாலும் அவரது அதிவேகமான பந்துவீச்சு ஆஸ்திரேலிய மைதானங்களில் நன்றாக எடுபடும் என்பதனாலும் அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by