விராட் கோலியை விட அவர் தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்.. யுவராஜ் பாராட்டு

Yuvraj Singh 3
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இந்தியாவின் அகமதாபாத் நகரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் வெற்றி கண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக போராட உள்ளன.

குறிப்பாக ஆஸ்திரேலியா தங்களுடைய 6வது கோப்பையை வெல்வதற்காகவும் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2011 போல 3வது முறையாக கோப்பையை முத்தமிடுவதற்காகவும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. இதில் இந்திய அணியை பொறுத்த வரை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் பெரிய ரன்களை குவித்து தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

யுவியின் தொடர் நாயகன்:
அதனால் அவர்கள் இந்த உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருதை வெல்லும் வீரர்களாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் மற்ற வீரர்களை விட தம்மைப் பொறுத்த வரை முகமது ஷமி தான் 2023 உலகக் கோப்பையின் உண்மையான தொடர் நாயகனாக இருப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது பற்றி 2011 உலகக்கோப்பை தொடர் நாயகன் விருது வென்ற அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் பெஞ்சில் எப்போதுமே மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா காயமடைந்தது நமக்கு ஆசிர்வாதம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அனைவரும் ஷமி எப்படி செயல்படுவார் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் களத்தில் நெருப்பாக செயல்பட்டுள்ளார்”

- Advertisement -

“எனவே இந்த உலகக்கோப்பையின் தொடர்நாயகன் விருதுக்கு ஒரு வீரர் தகுதியாக இருப்பார் என்றால் அது முகமது ஷமி என்று நான் கருதுகிறேன். அதே போல ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ட்ராவிட் ஆகியோர் தங்களுடைய முதல் உலகக் கோப்பை மெடலை வெல்வதற்கு நல்ல வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆசிய கோப்பைக்கு முன்பாக இந்திய அணி எங்கே இருக்கிறது என்று நாம் குழம்பி இருந்தோம். ஏனெனில் நம்முடைய கலவை நமக்கு தெரியாமல் இருந்தது”

இதையும் படிங்க: ஃபைனலில் விராட், ரோஹித்தை விட அவர் தான் எங்களுகளுக்கு பெரிய சவாலா இருப்பாரு.. கேப்டன் கமின்ஸ் ஓப்பன்டாக்

“இருப்பினும் ராகுல், ஸ்ரேயாஸ் மற்றும் பும்ரா ஆகியோர் காயத்திலிருந்து கம்பேக் கொடுத்தது இந்திய அணியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இந்திய அணியில் ஒரு காலத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை போல 8 – 10 மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார். அவர் கூறுவது போல முதல் 4 போட்டிகளில் விளையாடாத ஷமி அதன் பின் 6 போட்டிகளில் 23* விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றி நாயகனாக ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement