அப்படி என்ன லிங்க் ! இந்திய வீரருக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க நீலப்பட நடிகை – ரசிகர்கள் ஷாக்

shami
- Advertisement -

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த தொடரில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்திய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக வரலாற்றின் தங்கள் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த அந்த அணி தனது 2-வது போட்டியில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -

மிரட்டிய முஹம்மது ஷமி:
முன்னதாக லக்னோ அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் நட்சத்திர தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் முதல் பந்தை எதிர் கொண்டார். அந்த பந்தை வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அதிரடியாகவும் துல்லியமாகவும் பந்துவீசி ராகுலை முதல் பந்திலேயே டக் அவுட் செய்து அசத்தினார். அதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி பரிதாபத்திற்கு உள்ளாக்கினார்.

அதோடு நிற்காத முகமது சமி அவருடன் களமிறங்கிய மற்றொரு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் குயின்டன் டி காக்’கை 7 ரன்களில் அவுட் செய்து அடுத்த ஓவரிலேயே இந்திய வீரர் மனிஷ் பாண்டேவை 6 ரன்களில் காலி செய்தார். இப்படி முகம்மது ஷமியின் மிரட்டலான பந்துவீச்சில் 20/3 என ஆரம்பத்திலேயே சரிந்த லக்னோ அதிலிருந்து கடைசிவரை மீள முடியாமல் பரிதாபமாக தோல்வியடைந்தது. மொத்தத்தில் அந்த போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய முகமது சமி 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

நீலப்பட நடிகையின் வாழ்த்து:
ஐபிஎல் போன்ற தொடரில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி ரன் மழை பொழிந்து தங்கள் அணியை வெற்றி பெற வைக்கும் வேளையில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக அதுவும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் முகமது சமி அபாரமாக பந்து வீசி ஆட்டநாயகன் விருது வென்றது அனைவரின் பாராட்டுக்களை பெற்றது. அதனால் இர்பான் பதான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல முன்னாள் இந்திய வீரர்கள் தங்களது சமூக வலைதளங்களில் முகமது ஷமியை மனதாரப் பாராட்டினார்கள். அதேபோல் அனல் பறக்கும் வகையில் பந்துவீசி ஆட்டநாயகன் விருது பெற்ற அவருக்கு பல ரசிகர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

அந்த பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த ஷமிக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்பெஷலான வாழ்த்தும் பாராட்டும் வந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது என்றே கூறவேண்டும். ஆம் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நீலப்பட நடிகை கேந்த்ரா லஸ்ட் ஷமியின் அதிரடியான அனல் தெறித்த பந்துவீச்சை பார்த்து வியந்து போய் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டினார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் “முற்றிலும் அற்புதமான செயல்பாடு முகமது சமி” என கைதட்டி ஷமியின் ட்விட்டர் ப்ரோபைல் பக்கத்தை டேக் செய்திருந்தார்.

- Advertisement -

அப்படி என்ன லிங்க்:
இதை பார்த்த இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து விதவிதமாக சமூகவலைதளங்களில் கலாய்க்க தொடங்கியுள்ளனர். தற்போது 43 வயதாகும் கேந்த்ரா லஸ்ட் கடந்த பல வருடங்களாக நீலப்படங்கள் எனப்படும் ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அப்படிப்பட்ட அவருக்கும் இந்தியாவில் இருக்கும் முகமது ஷமிக்கும் அப்படி என்ன லிங்க் என பல ரசிகர்கள் பேசுகின்றனர்.

இத்தனைக்கும் ஆங்கிலம் சிறப்பாக தெரியாமல் பெரும்பாலும் இந்தியில் பேசும் ஒருவராக வலம் வரும் முகமது சமியால் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆங்கிலம் பேசும் ஒரு நீலப்பட நடிகையை எப்படி கவர முடிந்தது என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். இருப்பினும் அது தானே விளையாட்டு. எப்போதும் விளையாட்டுக்கு மொழி, இனம், மதம், நாடு, எல்லைகள் என எதுவும் கிடையாது என்று வல்லுனர்கள் கூறுவார்கள்.

இதையும் படிங்க : நீங்களா ராஜினாமா பண்ணிடுங்க, இங்கிலாந்து கேப்டனுக்கு வலுக்கும் எதிர்ப்பு – என்ன நடந்தது?

அது இந்த விஷயத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளது என்றே கூறலாம். அத்துடன் முகமது சமி மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரை தொடர்ந்து பார்ப்பவராக இருக்கும் அந்த நடிகை ஐபிஎல் சம்பந்தமான மேலும் ஒருசில ட்வீட்களை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement