நீங்களா ராஜினாமா பண்ணிடுங்க, இங்கிலாந்து கேப்டனுக்கு வலுக்கும் எதிர்ப்பு – என்ன நடந்தது?

Root
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் இரு அணிகளின் கடுமையான சமபலம் நிறைந்த மோதலுக்கு பின் டிராவில் முடிவடைந்தது. அதனால் சம நிலையில் இருந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரேனேடா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. அதில் இங்கிலாந்தை விட பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Brathwaite 2

- Advertisement -

இங்கிலாந்துதோல்வி முகம்:
அதன் காரணமாக முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் சர் இயன் போத்தம் – சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் பெயரில் ரிச்சர்ட்ஸ் – போத்தம் ட்ராபி என அழைக்கப்பட்ட இந்த தொடரின் கோப்பையை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் கௌரவம் வாய்ந்த அந்த கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. மறுபுறம் இந்த தொடரின் ஆரம்பத்தில் அசத்திய ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கடைசி போட்டியில் சொதப்பிய காரணத்தால் பரிதாபமாக தோல்வி அடைந்தது. அதிலும் கடந்த 2004-க்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாத சாதனையை மீண்டும் இங்கிலாந்து தொடர்கிறது.

அத்துடன் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் திண்டாடி வரும் இங்கிலாந்தின் பரிதாப போராட்டம் மீண்டும் தொடர்கிறது. கடைசியாக கடந்த 1968-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து அதன்பின் கடந்த 54 வருடங்களாக அங்கு வெற்றியை பதிவு செய்ய முடியாமல் மண்ணைக் கவ்வி வருவது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்து வருகிறது.

West indies vs england

ஜோ ரூட்க்கு எதிர்ப்பு:
இது மட்டுமல்லாமல்அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் தலைமையில் கடந்த சில வருடங்களாகவே இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து படு மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த 2021-க்கு பின் அவர் தலைமையில் 20 போட்டிகளில் பங்கேற்ற இங்கிலாந்து 11 தோல்விகளை சந்தித்து 4 வெற்றிகளை மட்டும் பெற்றது. 5 போட்டிகள் டிராவில் முடிந்தன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் 4 – 0 என்ற கணக்கில் படு மோசமான தோல்வியை அந்த அணி சந்தித்தது.

- Advertisement -

மேலும் இதுவரை ஜோ ரூட் தலைமையில் 64 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அதில் 27 தோல்விகளையும் 26 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளுக்கு கேப்டன்ஷிப் செய்த வீரர், அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து கேப்டன், அதிக தோல்விகளை பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து கேப்டன் என அனைத்து தரமான மற்றும் மோசமான சாதனைகளை ஜோ ரூட் பெற்றுள்ளார். இத்தனைக்கும் பேட்டிங்கில் மலைபோல ரன்களை அடிக்கும் அவர் கேப்டன்ஷிப் செய்வதில் சொதப்புகிறார் என்பதால் ஜோ ரூட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் அந்நாட்டு ரசிகர்கள் முன்னாள் வீரர்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

மரியாதையாக போய்டுங்க:
இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்பும் ஜோ ரூட் அதற்காக அணியில் உள்ள இதர வீரர்களின் ஆதரவு இருப்பதால் கண்டிப்பாக பதவி விலகப் போவதில்லை என வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த பின் வெளிப்படையாக அறிவித்தார். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்வதற்கு முன்பாக கௌரவத்துடன் ஜோ ரூட் ராஜினாமா செய்வதே நல்லது என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “அவர் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கேப்டன்ஷிப் செய்துவிட்டார். இந்த நிலையில் அவர் எனக்கு போன் செய்து என்ன செய்யலாம் என என்னிடம் கேட்டால் கண்டிப்பாக பதவி விலகி விடுங்கள் என்று கூறுவேன். அவர் கேப்டனாக இல்லையெனில் இங்கிலாந்து மோசமாகிவிடுமா? ஆனால் அவரை பதவி நீக்கம் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் விளையாட ஆசைதான். ஆனால் நான் விலகியதற்கு இதுதான் காரணம் – சாம் கரன் பேட்டி

இருப்பினும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் பிளின்டாப், பயிற்சியாளர் பால் காலிங்வுட் ஆகியோர் வலுக்கட்டாயமாக அவரை பதவி நீக்கம் செய்வதை பார்க்க நான் விரும்பவில்லை. கேப்டனாக அவரிடம் உள்ள நுணுக்கங்களும் யுக்திகளும் மிகவும் மோசமாக உள்ளது. ஒருவேளை அவர் கேப்டனாக தொடர்ந்தாலும் அவருக்கு உதவியாக நல்ல நுணுக்கங்கள் தெரிந்த துணை கேப்டன் தேவைப்படுகிறது” என கூறினார்.

Advertisement