களத்திற்கு வந்த 2 ஆவது பந்திலேயே முட்டிக்கொண்ட பாக்-தெ.ஆ வீரர்கள் – மைதானத்தில் நடந்தது என்ன?

Marco-Jansen
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் போட்டியானது இன்று அக்டோபர் 27-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது தென்னாப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களை மட்டுமே குவித்தனர். பின்னர் 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் பாகிஸ்தானின் சார்பாக பாபர் அசாம் மற்றும் சவுத் ஷாக்கில் ஆகிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஸ்வான் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான மார்கோ யான்சென் ஆகியோர் களத்திலேயே வார்த்தை முதலில் ஈடுபட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான அணி 38 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த வேளையில் நான்காவது வீரராக முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்ய வந்தார். அப்படி தான் களமிறங்கியதும் முதல் பந்தை சுதாரித்து விளையாடிய அவர் இரண்டாவது பந்திலேயே மார்க்கோ யான்செனை அதிரடியாக விளையாட நினைத்து பந்தை தூக்கி அடித்தார்.

- Advertisement -

அப்படி அவர் அடித்த பந்து நினைத்த திசையில் செல்லவில்லை என்றாலும் தேர்டுமேன் திசையில் பவுண்டரிக்கு பறந்தது. இப்படி அதிரடியாக ரிஸ்வான் ஆடுவதை எதிர்பார்க்காத யான்சென் அவரை நோக்கி பார்த்தவாறு நகர்ந்து சென்றார். இதனை கவனித்த முகமது ரிஸ்வான் அவரை நோக்கி ஏதோ கூறியவாறு அருகில் சென்றார். உடனே இருவரும் சில வார்த்தைகளை பரிமாற முகமது ரிஸ்வான் கையை நீட்டி அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

இதையும் படிங்க : விராட் கோலியை கம்பேர் பண்ணாதீங்க.. அது கிடைச்சிருந்தா சச்சின் 200 சதங்கள் அடிச்சிருப்பாரு.. ஸ்ரீசாந்த் அதிரடி

உடனே தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்டு கோட்சே இருவரையும் ஆசுவாசப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார். இவர்கள் இருவரும் களத்திலேயே வார்த்தை முதலில் ஈடுபட்ட ஒரு சில வீடியோக்களும் தற்போது இணையத்தில் வரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement