- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஸ்வின் திறமையில் பாதி கூட இல்லாத சுந்தர்.. முதலில் கேப்டன் நம்புற அளவுக்கு அதுல முன்னேறனும்.. கைஃப் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியில் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் வாஷிங்டன் சுந்தரும் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வேலையைத் தராமல் மாற்றி மாற்றி வாய்ப்புகள் வழங்கப்படுவது பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக கடந்த தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 3வது இடத்தில் விளையாடிய அவரை 2வது போட்டியில் இந்திய அணி 8வது இடத்தில் களமிறக்கியது. அதே போல பந்து வீச்சில் அவருக்கு அனைத்துப் போட்டிகளிலும் முழுமையாக ஓவர்களை வீசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதனால் முதலில் சுந்தரை இந்திய அணி பந்து வீச்சில் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

அஸ்வினில் பாதி கூட இல்லை:

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் திறமையில் பாதியைக் கூட வாஷிங்டன் சுந்தர் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். குறிப்பாக பந்து வீச்சுத் துறையில் சுந்தர் அனைத்து நேரத்திலும் விக்கெட்டுகளை எடுக்கும் பவுலராக இல்லை என்று அவர் கூறியுள்ளார். அதனாலேயே கேப்டன்கள் நம்பி அவருக்கு முழுமையாக பந்து வீசும் வாய்ப்பை வழங்கவில்லை என்றும் கைஃப் விமர்சித்துள்ளார்.

எனவே கேப்டனின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சுந்தர் தனது பந்து வீச்சில் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தும் கைஃப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுந்தரின் வேலை என்ன என்பது பற்றி அணி நிர்வாகம் பதிலளிக்கும். ஒரு ஸ்பின்னராக அஸ்வினின் திறமையில் அவர் பாதியைக் கூட இல்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெவ்வேறு கேப்டன்கள் தலைமையில் விளையாடிய போதும் கூட, எந்தக் கேப்டனும் அவருக்கு முழுமையான ஓவர்களை வழங்கவில்லை”

- Advertisement -

சுந்தர் முன்னேறனும்:

“நிலைமைகள் கடினமாகும் போது நமது கேப்டன்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவை நோக்கிச் செல்கிறார்கள். ஏனெனில் போட்டியின் எந்த சூழ்நிலையிலும் சுந்தரால் விக்கெட் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை கேப்டன்களிடம் இல்லை. எனவே அவர் தனது பந்து வீச்சில் நிறைய வேலை செய்ய வேண்டும். அவரிடம் விக்கெட்டுகளை எடுக்கும் திறன் குறைவாக இருக்கிறது”

இதையும் படிங்க: தம்பி ரியான் பராக் இப்போதைக்கு.. ருதுராஜ்க்கு போட்டியாக உங்களுக்கு இடமில்லை.. அஸ்வின் பேட்டி

“அந்த சூழ்நிலையில் சுந்தரை பேட்டிங் செய்ய விரும்பும் நீங்கள் அவர் மேல் அதிகப்படியான அழுத்தத்தைப் போடுகிறீர்கள். அவருக்கு ஒரு வேலையை தெளிவாகக் கொடுங்கள். அக்சர் பட்டேல் வேலையை அவரால் செய்ய முடியும் என்பது நல்லது. ஆனால் அவருடைய முதன்மை வேலை பவுலிங் மட்டுமே. பேட்டிங் என்பது போனஸ். ஆனால் அவரது பவுலிங் மோசமானால் அவர் இன்னும் பின்னோக்கி செல்வார். எனவே இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாட விரும்பினால் சுந்தர் தனது பந்து வீச்சில் முன்னேற வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -