தம்பி ரியான் பராக் இப்போதைக்கு.. ருதுராஜ்க்கு போட்டியாக உங்களுக்கு இடமில்லை.. அஸ்வின் பேட்டி

R Ashwin 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததால் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக 4வது இடத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் வாய்ப்பைப் பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் 2வது போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்து அசத்தினார்.

இதற்கிடையே இந்திய ஒருநாள் அணியில் ரியான் பராக் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று அவருடைய ஆதரவாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தார்கள். ராஜஸ்தான் அணியில் 3 – 4 வருடங்களாக திண்டாடிய ரியான் பராக் ஒரு வழியாக சமீபத்திய வருடங்களில் அசத்தி வருகிறார். அதன் காரணமாக 2024 இலங்கை டி20 தொடரில் இந்தியாவுக்காக தேர்வான அவர் கணிசமாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

திடீர் ரியன் பராக் ஆதரவாளர்கள்:

அதன் பின் தோள்பட்டையில் சந்தித்த காயத்தால் இந்திய அணியிலிருந்து விலகிய அவர் மீண்டும் குணமடைந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். எனவே மீண்டும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று ரியன் பராக் ரசிகர்கள் ட்விட்டரில் பேசி வருகிறார்கள். அதைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போதைக்கு ரியன் பராக் இந்திய ஒருநாள் அணியில் பொருந்த மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

அதுவும் ருதுராஜ் விளையாடும் 4வது இடத்தில் ரியன் பராக் கண்டிப்பாக பொருந்த மாட்டார் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ரியன் பராக் நல்ல திறமையானவர். ரன்கள் அடித்துள்ள அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 41 என்ற சராசரியை வைத்துள்ளார்”

- Advertisement -

அஸ்வின் விளக்கம்:

“இருப்பினும் தற்போது இந்திய அணியில் 5 அல்லது 6வது இடத்தில் விளையாடுவதற்கான தேவை மட்டுமே இருக்கிறது. எனவே அவர் தற்சமயத்தில் இந்திய அணியில் பொருந்த மாட்டார். ஏனெனில் தம்முடைய ஐபிஎல் அணிக்காக அல்லது அசாம் மாநில அணிக்காக அவர் பெரும்பாலும் 3வது இடத்திலேயே பேட்டிங் செய்துள்ளார். ராஜஸ்தான் அணியில் அவர் ஃபினிஷராக விளையாட முயற்சித்தது வேலை செய்யவில்லை”

இதையும் படிங்க: பெருசா சாதிக்காத அவங்கல்லாம் விராட், ரோஹித்தை எடை போடுறது வேதனையா இருக்கு.. ஹர்பஜன் விமர்சனம்

“3, 4வது இடங்களில் தான் வெற்றிகரமாக விளையாடினார். தற்போது இந்திய அணியில் ருதுராஜ்க்கு 4வது இடம் பொருந்தாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஐபிஎல் தொடர்களில் அவர் 3வது இடத்தில் விளையாடியுள்ளார். அதைப் பயன்படுத்தி தற்போது அவர் தன்னுடைய பன்முகத்தன்மையை காண்பிப்பதற்காக முயற்சிக்கிறார். அவருடைய உதாரணம் தேர்வுக்குழு அல்லது அவர் எடுத்த முடிவால் ஏற்பட்டிருக்கலாம். அதே போல தற்சமயத்தில் 5, 6வது இடத்தில் தம்மால் அசத்த முடியும் என்ற பன்முகத்தன்மையை நிரூபித்தால் மட்டுமே ரியனுக்கு வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement