ரோஹித் நீங்க 2 நாளைக்கு முன்னாடி இதை மட்டும் பண்ணுங்க. பாகிஸ்தான் டீமே பயப்படும் – கைப் ஓபன்டாக்

Mohammad-Kaif
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஆசியக்கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறயிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்த ஆண்டு 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட இருப்பதால் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடரானது அமைய உள்ளது.

Asia-Cup

- Advertisement -

இதன் காரணமாக தற்போது ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் வெல்லப்போகும் அணி எது? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதோடு இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்து விட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் ரோஹித் சர்மா செய்ய வேண்டிய ஒரு செயல் குறித்து தற்போது தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Rohith

ரோகித் சர்மா 28-ஆம் தேதி நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் இந்திய அணிக்கான பிளேயிங் லெவனை இரண்டு நாட்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் கடந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான அணி இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தங்களது அணியை அறிவித்து தாங்கள் ஒரு நிலையான அணி என்று கூறியிருந்தார்கள்.

- Advertisement -

அதேபோன்று தற்போது இந்திய அணியில் இருக்கும் வலிமைக்கு நிச்சயம் நமது பிளேயிங் லெவனை முன்கூட்டியே அறிவிக்கலாம். அப்படி அறிவிக்கும் பட்சத்தில் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி செட் ஆகி இருக்கிறது என்ற பயம் இருக்கும். அதோடு வீரர்களுக்கும் அது மனவலிமையை தரும்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : 6வது அணியாக தகுதி பெற்று இந்தியாவுடன் மோதப்போகும் அணி இதுதான் – பார்மட், ஒளிபரப்பு விவரம் இதோ

அதோடு இந்த தொடரில் முக்கிய வீரர்கள் பலரும் அணிக்கு திரும்பி உள்ளதால் என்னை பொறுத்தவரை இம்முறை இந்தியா பாகிஸ்தான் போட்டி ரசிகர்களுக்கு இன்னும் கூடுதல் சுவாரஸ்யத்தை அளிக்கும் என முகமது கைஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement