இந்த ஒரு காரணத்துக்காகவே அடுத்த வருஷம் டி20 வேர்லடுகப்ல ரோஹித் ஆடணும் – முகமது கைப் கருத்து

Kaif-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் சூரியகுமார் யாதவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு 2024 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்த ஒரு டி20 போட்டியிலும் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை அணியில் அவர்கள் இடம் பிடிப்பார்களா? என்பதே சந்தேகமாகி உள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற முடிந்த 50 ஓவர் உலககோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா நிச்சயம் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையிலும் கேப்டனாக விளையாட வேண்டியது அவசியம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ரோகித் சர்மா ஒரு அற்புதமான பேட்ஸ்மனாக இருப்பதைவிட மிகச் சிறப்பான கேப்டனாக இருக்கிறார். எனவே அவரது கேப்டன்ஷிப் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நிச்சயம் தேவை. அவரிடம் உள்ள பண்புகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதோடு ஒரு கேப்டனாக அவர் எடுக்கும் முடிவுகளும் சிறப்பாக இருப்பதால் அவரது தேவை இன்னமும் அணிக்கு தேவைப்படுகிறது.

இதையும் படிங்க : நல்ல டீம் தான்.. ஆனா இந்திய அணியால் அங்க மட்டும் ஜெயிக்க முடியாது.. ஜேக் காலிஸ் வெளிப்படை

எனவே என்னை பொறுத்தவரை அவர் அடுத்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டியது அவசியம். ரோகித் சர்மா ஒரு நல்ல பேட்ஸ்மேனாகவும் ஒரு நல்ல கேப்டனாகவும் இருந்து வருகிறார் எனவே அவர் அணிக்கு அவசியம் என முகமது கைஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement