நல்ல டீம் தான்.. ஆனா இந்திய அணியால் அங்க மட்டும் ஜெயிக்க முடியாது.. ஜேக் காலிஸ் வெளிப்படை

Jacques Kallis
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் சாம்பியன் பட்டத்தை நழுவ விட்ட இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணியினர் அங்கு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்கு தயாராகியுள்ளனர்.

இந்த சுற்றுப் பயணத்தில் கடைசியாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தான் மிகவும் முக்கியமானதாகவும் இந்தியாவுக்கு சவால் மிகுந்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் வரலாற்றில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் தொடரையாவது இந்தியா வென்றுள்ளது.

- Advertisement -

காலிஸ் சவால்:
ஆனால் 1992 முதல் இதுவரை தென்னாபிரிக்க மண்ணில் விளையாடிய அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியை சந்தித்த இந்தியா 2010இல் தோனி தலைமையில் மிகவும் கடுமையாக போராடி 1 – 1 (3) என்ற கணக்கில் தொடரை சமன் மட்டுமே செய்தது. எனவே இம்முறை 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் அந்த மோசமான வரலாற்றை மாற்றி புதிய சரித்திரம் படைக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

அதனாலேயே ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட தரமான வீரர்களை கொண்ட முதன்மை இந்திய அணி இத்தொடரில் களமிறங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா நல்ல அணியாக இருந்தாலும் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜேக் காலிஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது நல்ல இந்திய அணியாக இருக்கிறது. ஆனால் தென்னாபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது. இத்தொடர் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் தென்னாப்பிரிக்காவுக்கும் நியூலேண்ட்ஸ் மைதானம் இந்திய அணிக்கும் பொருத்தமாக இருக்கலாம். எனவே இத்தொடர் மிகவும் தரமானதாக இருக்கும்”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ ஜெயிக்க அதுல இந்தியா முன்னேறியே தீரணும்.. ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

“அதில் 1 அல்லது 2 செஷன்களில் ஒரு அணி மற்றொரு அணியை விட சிறப்பாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இத்தொடர் மிகவும் நெருக்கமான போட்டி நிறைந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல கடைசியாக 2021இல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது விராட் கோலி தலைமையில் முதல் போட்டியில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் விராட் கோலி காயமடைந்து வெளியேறியதை பயன்படுத்திய டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா கடைசி 2 போட்டியில் வென்று இந்தியாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement