தோனிக்கு ஒரு நியாயம் விராட் கோலிக்கு ஒரு நியாயமா? அம்பயர்களை விளாசிய முகமது கைப்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் திண்டாடும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது என்றே சொல்லலாம்.

முன்னதாக கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியில் பெங்களூரு அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அப்போட்டியில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அவுட் கொடுக்கப்பட்ட விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோ ஃபுல் டாஸ் பீமர் பந்து இடுப்புக்கு மேலே வந்ததால் சிக்சர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அடித்த விராட் கோலி கடைசியில் பவுலரிடமே கேட்ச் கொடுத்தார்.

- Advertisement -

மோசமான அம்பயரிங்:
இருப்பினும் அப்போது களத்திலிருந்த நடுவர்கள் அவுட் கொடுத்ததை தொடர்ந்து விராட் கோலி ரிவ்யூ எடுத்தார். அதை சோதித்த போது விராட் கோலியின் இடுப்பை (1.04மீ) விட பந்து (0.92மீ) குறைவான உயரத்தில் வந்ததால் 3வது நடுவர் மைக்கேல் கௌ மீண்டும் அவுட் என்று அறிவித்தார். அதற்கு அனைத்து ஆர்சிபி ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ஜாம்பவான் வீரர் தோனியின் பேட்டுக்கு கீழே ஒரு பந்து சென்றது. இருப்பினும் அது அகலக்கோட்டுக்கு வெளியே சென்றதால் நடுவர்கள் ஒயிட் என்று அறிவித்தனர். ஆனால் அதே போல விராட் கோலிக்கு எதிராக பீமர் பந்து வீசப்பட்டும் நடுவர்கள் நோபால் வழங்கவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் தோனிக்கு ஒரு நியாயத்தை கொடுத்து விட்டு விராட் கோலிக்கு மற்றொரு நியாயத்தை கொடுத்துள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள கைஃப் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “தெளிவாக விளையாட முடியாத பீமர் பந்தில் விராட் கோலி அவுட்டானார். ஆனால் தோனியின் பேட்டின் கீழே சென்ற ஒரு பந்து ஒய்ட் என அறிவிக்கப்பட்டது. கேமராக்கள், ரிப்ளை, டெக்னாலஜி ஆகியவை இருந்தும் இது போன்ற தவறுகள் செய்யப்படுகின்றன”

இதையும் படிங்க: மீண்டும் ஃபார்முக்கு திரும்ப உதவிய அந்த 2 சீனியர்களுக்கு நன்றி.. மும்பையை நொறுக்கிய ஜெய்ஸ்வால் பேட்டி

“இது மோசமான அம்பயரிங்” என்று கூறியுள்ளார். அத்துடன் விராட் கோலி கண்டிப்பாக அவுட் கிடையாது என்று தெரிவித்த மற்றொரு முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து காலத்தின் வளர்ச்சிக்கேற்ப இது போன்ற விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். மொத்தத்தில் விராட் கோலிக்கு எதிராக வழங்கப்பட்ட அந்த தீர்ப்பு பெங்களூரு அணியின் தோல்வியின் முக்கிய பங்காற்றியது என்று சொல்லலாம்.

Advertisement