- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிதிஷ் ரெட்டிக்கு அக்சர் பட்டேல் குறைஞ்சவரா? இந்தியா ஜெய்க்க அவங்க 2 பேரும் சேந்து ஆடனும்.. ஃகைப்

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து பதிலடி கொடுத்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை நியூசிலாந்து 47.3 ஓவரில் எளிதாகத் தொட்டு வென்றது.

அப்போட்டியில் மிடில் ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காத இந்திய அணி மோசமாக பந்து வீசியது தோல்விக்கு காரணமானது. அதே போல ஆல் ரவுண்டர்களாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா, நித்திஷ் ரெட்டி ஆகியோர் பேட்டிங், பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த வீரர் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அகர்கரின் மோசமான தேர்வு:

அதே போல நித்திஷ் ரெட்டியை விட அக்சர் பட்டேல் அனுபவத்தில் சிறந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் அவரை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கவில்லை என்று கைஃப் சாடியுள்ளார். அத்துடன் ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் ஆல் ரவுண்டர்கள் துறையில் சேர்ந்து விளையாடினால் இந்தியா வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் முன்னணியில் இருப்பார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவருடைய பேட்டிங் திறன், சிக்ஸர் அடிக்கும் திறன், ஆகியவை ஜடேஜாவை விட சிறந்ததாக இருக்கிறது. அதை நாம் ஐபிஎல் தொடரில் பார்த்துள்ளோம். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அக்சர் பட்டேல் முன்னணியில் இருக்கிறார்”

- Advertisement -

கைஃப் சாடல்:

“அவரால் பந்து வீச்சில் பவர்பிளே ஓவர்களில் பவுலிங் போட முடியும். ஆனால் அவர் ஏன் அணியிலேயே இல்லை? என்று எனக்குத் தெரியவில்லை. மறுபுறம் நீங்கள் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக பலவீனமான ஆட்டத்தைக் கொண்ட நிதிஷ் ரெட்டிக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பளித்துள்ளீர்கள். இது மட்டுமின்றி நீங்கள் அர்ஷ்தீப் சிங்கை பெஞ்சில் அமர வைக்கிறீர்கள். என்னைப் பொறுத்த வரை ஜடேஜா, அக்சர் இருவரும் விளையாடுவதை விரும்புகிறேன்”

இதையும் படிங்க: அர்ஷ்தீப்பை விட்டுட்டு அந்த சொதப்பல் பவுலருக்கு சான்ஸ் கொடுத்தா.. 2027 உ.கோ ஜெய்க்க முடியாது.. கைஃப் சாடல்

“ஒருவேளை கடந்த போட்டியில் ரெட்டிக்கு பதிலாக அக்சர் இருந்திருந்தால் நம்முடைய அணியின் சமநிலை இன்னும் நன்றாக இருந்திருக்கும். பந்து வீச்சில் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலுக்கு இடையே வித்தியாசம் உள்ளது. பந்து வீச்சில் அவர்களே இருவருமே வித்தியாசமான ஸ்டைலைக் கொண்டுள்ளார்கள். ஜடேஜா பவர்பிளே முடிந்த பின்பே வருவார். ஆனால் அக்சர் பட்டேல் புதிய பந்திலும் சிறப்பாக பவுலிங் செய்வார். 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் அவர் புதிய பந்தில் விக்கெட்டுகளை எடுத்தார்” என்று கூறினார்.

- Advertisement -