இந்திய டெஸ்ட் டீம்ல இவரை சேக்காதது ரொம்ப தப்பு. இந்திய அணித்தேர்வை விளாசிய – முகமது கைப் பேட்டி

Kaif-and-Rohit-Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று முன்தினம் டிசம்பர் 14-ஆம் தேதி சட்டகிராம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மும்பை திரும்பியதால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. அதேபோன்று மேலும் சில வீரர்களும் காயம் காரணமாக அணியில் இடம் பெறாததால் பல வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பும் கிடைத்தது.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று துவக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக இந்திய அணியில் தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் அவருக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் அவர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு அறிமுக வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தற்போது அபிமன்யு ஈஸ்வரனுக்கு ஆதரவாகவும், இந்திய அணியின் வீரர்கள் தேர்வினை எதிர்த்தும் சற்று காட்டமான ஒரு கருத்தினை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை தனது அற்புதமான பேட்டிங் பார்மை வெளிக்காட்டி வருகிறார். அதனால் தான் தேர்வுக்குழுவினர் அவரை இந்த டீமில் அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

abhimanyu easwaran 1

ஆனாலும் அவருக்கு ஆடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிமன்யு ஈஸ்வரன் இந்திய ஏ அணிக்காக தலைமை தாங்கி வங்கதேச சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து சதங்களை விளாசி தனது வாய்ப்பினை இத்தொடரில் பெற்றிருக்கிறார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் அற்புதமான ரன் குவிப்பை வழங்கி இருக்கிறார். ஆனாலும் அவருக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.

- Advertisement -

ஏனெனில் சில வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் ஒன்று இரண்டு போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கூட அவர்களை நேரடியாக தேர்வு செய்து விளையாட வைக்கிறார்கள். ஆனால் அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்கள் 4-5 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருந்தும் அவர்களை விளையாட வைப்பதில்லை இது மிகப்பெரிய தவறு என்று முகமது கைப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 ஏலம் : அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய 5 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்களின் பட்டியல்

மேலும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபிமன்யு ஈஸ்வரன் விளையாடி இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 27 வயதான அபிமன்யு ஈஸ்வரன் 78 முதல் தரப் போட்டிகள் மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்று 9000 ரன்களை அடித்தும் இன்றளவும் தேசிய அணியின் அறிமுக வாய்ப்புக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement