ஐபிஎல் 2023 ஏலம் : அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய 5 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்களின் பட்டியல்

Narayan Jagadeesan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் கோலாகலமாக நடைபெறும் நிலையில் அதற்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 450 வீரர்கள் களமிறங்கும் நிலையில் பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தில் திறமையும் தரமும் கொண்டுள்ள வீரர்கள் அந்த சமயத்தில் எந்த அளவுக்கு ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதை பொருத்தே அதிக தொகைக்கு ஏலம் போவார்கள். மேலும் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்த ஏலத்தில் எப்போதுமே தனித்துவமான மவுசு இருக்கும். இருப்பினும் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடும் இளம் வீரர்கள் மீதும் ஐபிஎல் அணிகளின் கவனம் இருந்து கொண்டே இருக்கும்.

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களை விட அவர்களை குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்பதுடன் இந்தியர் என்ற அடிப்படையில் ஒரு போட்டியில் 7 இந்திய வீரர்களை தேர்வு செய்யும் போது மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த ஏலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிறைய இந்திய வீரர்கள் களமிறங்கினாலும் அதிக தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடிய சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. பிரேரக் மன்கட்: சௌராஷ்ட்ராவை சேர்ந்த இவர் 42 உள்ளூர் டி20 போட்டிகளில் 822 ரன்களை 142.60 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டிலும் மிக வேகப்பந்து வீச்சாளராக 22 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

அதனாலேயே இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டிருந்த அவர் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு கழற்றி விடப்பட்டுள்ளார். இருப்பினும் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையை சௌராஷ்ட்ரா வெல்லும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவரை வாங்க ஏலத்தில் அனைத்து அணிகள் போட்டி போடலாம்.

- Advertisement -

4. சிவம் மாவி: 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியதால் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி கொல்கத்தா அணிக்காக 20 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஆரம்ப கட்டத்தில் அசத்தினாலும் இந்த வருடம் 10.36 என்ற சுமாரான எக்கனாமியில் பந்து வீசினார்.

இருப்பினும் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் இவரை ஒரு மோசமான சீசன் வைத்து எந்த அணியும் மதிப்பிடாது என்பதால் இந்த ஏலத்தில் நல்ல தொகைக்கு ஏதேனும் ஒரு அணியில் வாங்கப்படுவார் என்று நம்பலாம்.

- Advertisement -

3. வைபவ் அரோரா: இமாச்சலைச் சேர்ந்த இவர் 2021 தொடரில் கொல்கத்தா அணியில் வாங்கப்பட்டு பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் இந்த வருடம் பஞ்சாப் அணியில் 5 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று ராபின், உத்தப்பா மொயின் அலி உட்பட 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இருப்பினும் அதிக வாய்ப்புகளை பெறாமலேயே கழற்றி விடப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அவரை இந்த ஏலத்தில் நிச்சயமாக மீண்டும் ஏதேனும் ஒரு அணி நிர்வாகம் நல்ல தொகைக்கு வாங்கும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

2. கேஎஸ் பரத்: ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் தேர்வானாலும் இதுவரை விளையாடும் வாய்ப்பு பெறவில்லை. அந்தளவுக்கு ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்துள்ள அவர் 2021 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 191 ரன்களை எடுத்தும் பெங்களூரு அணி கழற்றி விட்டது.

அதை தொடர்ந்து இந்த வருடம் டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட அவர் ரிஷப் பண்ட் இருந்ததால் 2 போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற நிலையில் மீண்டும் கழற்றி விடப்பட்டார். எனவே நல்ல திறமையும் இளமையும் உள்ள அவரை விக்கெட் கீப்பர் தேவைப்படும் அணிகள் நிச்சயமாக நல்ல தொகைக்கு வாங்கும் என்பதில் சந்தேகமில்லை.

1. நாராயன் ஜெகதீசன்: தமிழகத்தைச் சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டதால் சென்னை அணியில் வாங்கப்பட்டார். இருப்பினும் பெயரில் மட்டும் தமிழை வைத்துக் கொண்டு சமீப காலங்களில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வரும் சென்னை அணியில் நிலையற்ற 7 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 73 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதை காரணமாக வைத்து கழற்றி விடப்பட்ட அவர் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 8 போட்டிகளில் 830 ரன்களை விளாசி ஒரு போட்டியில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். அதனால் விட்டு விட்டோமே என்று சென்னை வருந்தும் அளவுக்கு இவருடைய மதிப்பு தற்போது பன்மடங்கு அதிகரித்து விட்டது.

இதையும் படிங்க: வீடியோ : மாயமில்லை மந்திரமில்லை, பந்தும் பேட்ஸ்மேன் காலும் படாமலேயே – பெய்ல்ஸ் விழுந்தது எப்படி? அனைவரும் வியப்பு

அதன் காரணமாக இந்த ஏலத்தில் நிச்சயம் இவரை கோடிகளில் வாங்குவதற்கு அனைத்து அணிகளும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் சென்னை மட்டும் மீண்டும் வாங்கி விடக்கூடாது என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement