INDvsENG : அரையிறுதியில் அசத்தப்போகும் இந்திய வீரர் இவர்தான். கோலி, சூர்யா இல்லை – முகமது கைப் கணிப்பு

Kaif
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்களின் முடிவின்படி குரூப் ஒன்றில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் இரண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளன. அதனை தொடர்ந்து நாளை நவம்பர் 9-ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் முதலாவது அரையிறுதி போட்டியிலும், அதனை தொடர்ந்து நவம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் மோத இருக்கின்றன.

Semi Finals

- Advertisement -

அதன்படி இந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கும் வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்தும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடப் போகும் வீரர்கள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அசத்தப்போகும் வீரர் யார்? என்பது குறித்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா இந்த தொடரில் பெரிய அளவில் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று நான் நினைக்கிறேன்.

Rohit Sharma IND vs NED

அவர் இந்த அரையிறுதி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவார். அதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் அதிக ரன்கள் அடித்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மேலும் அழுத்தம் நிறைந்த நேரங்களில் மிகப்பெரிய ஆட்டத்தை வழங்குவதில் ரோகித் சர்மா வல்லவர்.

- Advertisement -

அதன் காரணமாக அவர் இந்த அரையிறுதியில் அசத்துவார் என்று முகமது கைப் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரோகித் சர்மாவை நான் சிறந்த வீரராக கருதுகிறேன். ஏனெனில் கடந்த காலங்களிலும் அவர் இது போன்ற பெரிய ஆட்டங்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் வந்துவிட்டது.

இதையும் படிங்க : இங்கிலாந்து வெற்றிக்காக கொஞ்சம் வழி விடுங்கள் – கோலியிடம் பீட்டர்சன் வைக்கும் கோரிக்கை

எனவே கேப்டனாக ரோஹித்துக்கு இது ஒரு மிக முக்கியமான போட்டி. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பினை ஏற்றதிலிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா இந்த போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது மதிப்பினை நிரூபிப்பார் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement