இங்கிலாந்து வெற்றிக்காக கொஞ்சம் வழி விடுங்கள் – கோலியிடம் பீட்டர்சன் வைக்கும் கோரிக்கை

Pieterson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதில் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா குரூப் 1 புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்த இங்கிலாந்தை வரும் வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே பேட்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இப்போட்டியிலும் சிறப்பாக செயல்பாடுகள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த கடுமையான விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பிய விராட் கோலி அதே புத்துணர்ச்சியுடன் இந்த உலகக் கோப்பையில் 246* ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கதை முடிந்ததாக கருதப்பட்ட இந்தியாவுக்கு வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

ஹெல்ப் பண்ணுங்க:
அதை விட இந்த அற்புதமான செயல்பாடுகளால் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக இதே உலகக் கோப்பையிலிருந்து மனசாட்சியின்றி நன்றியை மறந்து நீக்க சொன்ன அதே முன்னாள் இந்திய வீரர்களை கைதட்டி பாராட்ட வைத்துள்ள விராட் கோலி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் பார்மை இழந்து தவித்த மோசமான காலங்களில் உங்களுக்கு ஆதரவு கொடுத்ததால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பாக செயல்படாமல் எங்களது வெற்றிக்கு வழி விடுங்கள் என்ற வகையில் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விராட் கோலியிடம் விளையாட்டான கோரிக்கை வைத்துள்ளார்.

Kohli

இங்கு முன்னாள் வீரர்கள் என்ற பெயரில் விமர்சிக்கும் நிறைய பேரில் நீங்கள் ஏற்கனவே அடித்த 70 சதங்களை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் பார்மை இழந்து தவித்த போது விராட் கோலிக்கு பீட்டர்சன் ஆதரவு கொடுத்தார். அந்த நிலையில் தற்போது பார்முக்கு வந்துள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ள பீட்டர்சன் விளையாட்டான கோரிக்கையுடன் விராட் கோலியை பாராட்டி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“லேசாக ஃபார்மை இழந்து தவித்த கடந்த காலம் முழுவதிலும் நான் விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்துள்ளேன். அந்த சமயங்களில் அவர் நிறைய சவால்களை சந்தித்தார். இருப்பினும் நல்ல பொழுதுபோக்கை காட்டக்கூடிய அவருக்கு ரசிக கூட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஆதரவும் எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக இல்லாத காரணத்தாலேயே அவர் பார்மை இழந்தார்”

Pieterson

“ஆனால் இந்த உலக கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே ரசிக கூட்டங்கள் இருக்கும் என்பதால் அது டி20 கிரிக்கெட் விளையாட மகத்தான இடமாகும். அங்கு கிங் இஸ் பேக். அவருடைய நெருங்கிய நண்பராக அவர் பார்முக்கு திரும்பியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் விராட் கோலி சிறப்பாக செயல்படாத அந்த ஒருநாள் மட்டும் (இங்கிலாந்துக்கு எதிராக) எனக்கு தேவைப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் தற்சமயத்தில் மிகச் சிறந்த வீரரான அவர் பார்முக்கு திரும்பியுள்ளது இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டுக்கே வரவேற்கும் அம்சமாகும்”. “அதிலும் இந்தியாவைப் பொறுத்த வரை அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படக் கூடியவர். அவர் சிறப்பாக செயல்படும் போது இதர வீரர்கள் அவரை சுற்றி செயல்பட வேண்டிய நிலை தாமாகவே உருவாக்கி விடும்.

இதையும் படிங்க : கேமராமேன் பாக்குற வேலையா இது, வைரல் வீடியோவால் அனைவரது கிண்டலுக்கு உள்ளான அஷ்வின் – கொடுத்த கூலான பதில் இதோ

குறிப்பாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக சூரியகுமார் யாதவ் விளையாடிய இன்னிங்ஸை பார்த்திருப்பீர்கள். அது முதன்மையான விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியதால் நிகழ்ந்த ஒன்றாகும்” என்று கூறினார்.

Advertisement