
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் 27 கோடி என்ற பிரம்மாண்ட சம்பளத் தொகைக்கு லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை அவர் பேட்டிங் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இருப்பினும் அவருடைய தலைமையில் இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள லக்னோ புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் அசத்தி வருகிறது.
குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த ஓவரை வீசிய ஆவேஷ் கான் 6 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்து லக்னோவின் வெற்றியில் பங்காற்றினார். அந்த ஓவரை ஆவேஷ் கான் மற்றும் லக்னோ அணியினர் மிகவும் நேரம் எடுத்து மிகவும் மெதுவாக வீசினார்கள்.
இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் கடைசி ஓவரை வேண்டுமென்றே ரிஷப் பண்ட் 10 நிமிடங்கள் வரை தாமதமாக பௌலிங் செய்ததாக முன்னாள் வீரர் முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்ததன் வாயிலாக எதிரணியின் வேகத்தை உடைத்த ரிஷப் பண்ட் லக்னோவுக்கு வெற்றி பெற உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலிலும் காயமடைந்தது போல் ரிஷப் பண்ட் சில நிமிடங்கள் போட்டியை தாமதப்படுத்தியது இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்தது.
அதே போல அந்தப் போட்டியில் செயல்பட்ட ரிசப் பண்ட் கேப்டன்ஷிப் அண்டர்ரேட்டட் என்றும் ஃகைப் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் (எக்ஸ்) கூறியுள்ளது பின்வருமாறு. “கடைசி ஓவர் இரவு 11.07 மணிக்கு துவங்கி 10 நிமிடங்கள் வரை சென்றது. அங்கே வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்திய தந்திரோபாயங்கள் நடந்தது”
“ரிஷப் பண்ட் தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு பந்தை மாற்றி ஆவேஷ் கான் ஓடி வந்த போது பாதியிலேயே நிறுத்தி வேண்டுமென்றே எதிரணி பேட்ஸ்மேனை களத்தில் காத்திருக்க வைத்தார். இது முதல் முறையாக நடைபெறவில்லை. 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் கடைசி 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது மில்லர், க்ளாஸென் ஆகியோர் களத்தில் இருந்தனர்”
இதையும் படிங்க: சிஎஸ்கே’வை இப்படி பாக்குறது கஷ்டமா இருக்கு.. அந்த வீரர்களை வாங்காம சொதப்பிட்டாங்க.. ரெய்னா, ஹர்பஜன்
“அப்போது ரிஷப் பண்ட் தான் களத்தில் காயமடைந்ததாக விழுந்து மருத்துவர்களை வர வைத்தார்” என்று “ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் அதிகம் அண்டர்ரேட்டட்” என்ற தலைப்புடன் பதிவிட்டு பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து லக்னோ தங்களது அடுத்தப் போட்டியில் சொந்த ஊரில் ஏப்ரல் 22ஆம் தேதி டெல்லியை எதிர்கொள்கிறது.