சிஎஸ்கே’வை இப்படி பாக்குறது கஷ்டமா இருக்கு.. அந்த வீரர்களை வாங்காம சொதப்பிட்டாங்க.. ரெய்னா, ஹர்பஜன்

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருவது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனைப் படைத்துள்ள சென்னை இந்த வருடம் முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்தது. ஆனால் அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது.

அதன் பின் தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக வென்ற சென்னை தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பைக்கு எதிராக நேற்று சென்னை போராடாமலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் சென்னை 20 ஓவரில் அடித்த 176 ரன்களை மும்பை வெறும் 15.4 ஓவரில் எடுத்து வெற்றி பெற்றது

- Advertisement -

திணறும் சென்னை:

அந்தளவுக்கு சென்னை அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மோசமாக விளையாடி வருகிறது. அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் திண்டாடும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஏலத்தில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற தரமான வீரர்களை வாங்காமல் விட்ட சிஎஸ்கே அணி இப்படி தடுமாறுவதைப் பார்ப்பது வேதனையைக் கொடுப்பதாக சின்னத் தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கவலைத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏலத்தில் ஏதோ ஒரு வகையில் சிஎஸ்கே நன்றாக செல்லவில்லை என்று நான் கருதுகிறேன். ஏலத்தில் ஏராளமான திறமை மிகுந்த வீரர்களும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சென்னை அணியில் எங்கே இருக்கின்றனர். ஏலத்திற்கு நீங்கள் நிறைய பணத்துடன் சென்றீர்கள். ஆனால் அங்கே நீங்கள் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ், ராகுல் போன்றவர்களை விட்டுவிட்டு வந்தீர்கள்”

- Advertisement -

ஹர்பஜன் கேள்வி:

“சிஎஸ்கே இந்தளவுக்கு தடுமாறுவதை நான் எப்போதும் பார்த்ததில்லை” என்று கூறினார். அவருடன் பேசிய மற்றொரு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விக்னேஷ் புதூர் போன்ற இளம் வீரர்களை கண்டறிந்த மும்பை போல சென்னை தங்களுடைய அணியை கட்டமைக்காததே தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே மிகவும் பெரிய அணி. அந்த வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு ஏலத்தில் இருந்தது”

இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் இஸ் பேக்.. வருண் உட்பட 2 தமிழருக்கு இடம்.. பிசிசிஐ இந்திய அணியின் 2025 சம்பள ஒப்பந்தம் இதோ

“அவர்களுடைய இளம் வீரர்களும் போட்டியை மாற்றுபவர்களாக அசத்தவில்லை. இதற்கு திறமையான வீரர்களை கண்டறியும் சிஎஸ்கே அணியின் சாரணர் இயக்கம் பற்றி கேள்வி கேட்கப்பட வேண்டும். ஏனெனில் அதன் அடிப்படையிலேயே அவர்களுடைய தேர்வு அமைந்துள்ளது” என்று கூறினார். மொத்தத்தில் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல சென்னை அடுத்த 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement