டெஸ்ட் அணியின் கேப்டனாக இவர்தான் என்னுடைய நம்பர் 1 சாய்ஸ் – முகமது அசாருதீன் தேர்வு

Azharuddin
- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி அன்மையில் தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த வேளையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து திடீரென வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படும் புதிய வீரர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவி வருகிறது.

- Advertisement -

பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை கூறி வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் குறித்து தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தற்போது இந்திய அணியின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா திகழ்கிறார்.

எனவே அவரை டெஸ்ட் கேப்டனாக மாற்றுவதில் எந்த தவறுமில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறன் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் தற்போது இந்திய அணி இருக்கும் நிலைமையை கருத்தில் கொண்டு அனுபவமும் தகுதியும் உடைய ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற காரணத்தினால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

rohith

கடந்த சில வருடங்களாக நான் கவனித்த வரையில் ரோகித் மிகவும் சிறப்பான வீரராகவும், நல்ல கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இன்னும் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் 3-4 ஆண்டுகள் மீதமுள்ளது. நிச்சயம் அவரால் டெஸ்ட் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். தென்னாப்பிரிக்க தொடரின் போது அவர் காயம் காரணமாக இடம் பெற முடியாமல் போனதால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் மீண்டும் அவர் அணிக்கு திரும்பும் வேளையில் இந்திய அணி பலப்படும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பதான் பிரதர்ஸ் இல்லனா இன்னைக்கு நான் இந்திய அணியில் இடம்பிடிச்சிருக்கவே முடியாது – இளம்வீரர் பேட்டி

ஏற்கனவே டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்குத் தான் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தாலும் தற்போது இந்திய அணி ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி உள்ளதால் ரோகித்சர்மா டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement