பதான் பிரதர்ஸ் இல்லனா இன்னைக்கு நான் இந்திய அணியில் இடம்பிடிச்சிருக்கவே முடியாது – இளம்வீரர் பேட்டி

yusuf
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் வரும் பிப்ரவரி மாத துவக்கத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் காயத்திலிருந்து குணமடைந்ததுள்ள புதிய கேப்டன் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடரில் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதாரண வீரராக விளையாட உள்ள நிலையில் ரவி பிஸ்னோய் உள்ளிட்ட சில இளம் வீரர்களுக்கு முதல் முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த அணியில் நீண்ட நாட்கள் கழித்து இடம் பிடித்துள்ளார்.

ind

- Advertisement -

முதல் முறையாக தீபக் ஹூடா:
இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ராஜஸ்தானை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா இடம் பிடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது 26 வயது நிரம்பியுள்ள இவர் ஏற்கனவே கடந்த 2017-18 ஆண்டில் நடந்த ஒரு கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனாலும் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் மனம் தளராது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். அந்த வேளையில் அவர் சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை துவங்கும் நாளன்று சக வீரர் க்ருனால் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்றரை வருடம் பரோடா கிரிக்கெட் வாரியத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Hooda-2

ஆதரவு அளித்த பதான் சகோதரர்கள் :
இருப்பினும் அதன்பின் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தற்போது மீண்டும் 5 வருடம் கழித்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் காலடி வைக்க முன்னாள் இந்திய வீரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் உதவியதாக தீபக் ஹூடா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில்,

- Advertisement -

“வாய்ப்பு இன்னும் மூழ்கவில்லை. கடந்த வருடம் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோரின் உதவியுடன் குடும்பத்தினரின் ஆதரவுடன் மோசமான தருணங்களில் இருந்து மீண்டு மிகப்பெரிய கனவு கண்டேன். இந்த தருணத்தைப் பற்றி கூற வார்த்தைகள் இல்லை என்றாலும் இது மிகப்பெரிய பரிசாகும். இந்த தருணத்துக்காக 5 வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

hooda

மோசமான தருணங்களில் இருந்து நான் மீண்டு வந்த பெருமை அனைத்தும் இர்பான் மற்றும் யூசுப் பதான் ஆகியோரை சேரும். அவர்கள் எனக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துள்ளார்கள். அந்த படங்களால் நான் ஒரு முதிர்ச்சியான கிரிக்கெட் வீரராக மாறியுள்ளேன்” என தெரிவித்துள்ள தீபக் ஹூடா தடையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுவதற்கு உதவிய பதான் சகோதரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கை கொடுத்த ராஜஸ்தான் :
பரோடா அணியில் க்ருனால் பாண்டியாவுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக வேறு வழியின்றி ராஜஸ்தான் மாநிலத்திற்கு தீபக் ஹூடா இடம்பெயர்ந்தார். அங்கு அவரை ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை விஜய் ஹசாரே 2021 கோப்பை தொடரில் கேப்டனாக அறிவித்து கை கொடுத்தது. அந்த தொடரில் ஒரு சதம் உட்பட 198 ரன்கள் விளாசியதால் தற்போது இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

hooda

அனில் கும்ப்ளே – கேஎல் ராகுல் :
ராஜஸ்தானில் இடம்பெயர்ந்த பின்னர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியது பற்றி தீபக் ஹூடா கூறுகையில்,”மோசமான தருணங்களில் இருந்து வெளிவர அனில் கும்ப்ளே முக்கிய பங்காற்றினார். அவர் போன்ற ஒரு ஜாம்பவானிடமிருந்து ஆதரவு பெறுவது மிகப்பெரிய விஷயமாகும். அத்துடன் ஐபிஎல் தொடரில் களத்துக்கு வெளியே கேஎல் ராகுல் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தார்” என கூறினார்.

இதையும் படிங்க : இந்த ரூல்ஸ்லாம் அப்போ இருந்திருந்தா சச்சின் 1 லட்சம் ரன்கள் அடித்திருப்பார் – சோயிப் அக்தர் ஓபன்டாக்

உள்ளூர் கிரிக்கெட்டில் இதுவரை 74 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2257 ரன்களையும் 35 விக்கெட்டுகளை எடுத்து ஒரு நல்ல மிடில் ஆர்டர் வீரராக விளையாடக்கூடிய தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement