இந்த ரூல்ஸ்லாம் அப்போ இருந்திருந்தா சச்சின் 1 லட்சம் ரன்கள் அடித்திருப்பார் – சோயிப் அக்தர் ஓபன்டாக்

sachin
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சமீப காலங்களாக பேட்டர்கள் ரன் மழை பொழிவதால் பந்துவீச்சாளர்களின் நிலைமை படாதபாடாக உள்ளது. பல போட்டிகளில் அபாரமாக பந்துவீசி அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்தாலும் ஒரு சில போட்டிகளில் மோசமாக பந்து வீசினால் உடனே அவர்களின் இடம் காலியாகி விடுகிறது. ஐபிஎல் போன்ற பல டி20 போட்டிகளின் வருகையால் கிரிக்கெட்டில் பேட்டிங் துறை பல்வேறு வகையான பரிணாமங்களை பெற்றுள்ளது.

sachin 1

- Advertisement -

குறைந்த பவுலர்களின் ஆதிக்கம்:
டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு முன்பாக பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகப்படியாக இருந்தது. குறிப்பாக 90களில் பவுலர்கள் கோலோச்சிய வேளையில் ஒரு பேட்டர் சதம் அடிப்பது என்பது மிகவும் கடினமாகும். அப்போதெல்லாம் 50 ஓவர்களில் 250 ரன்களை அடிப்பது என்பதே பேட்டர்களுக்கு மிகவும் கடினமாகும். ஆனால் டி20 கிரிக்கெட்டின் வருகையால் இப்போதெல்லாம் 20 ஓவர்களில் 250 ரன்கள் அடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

புதிய ரூல்ஸ்:
நோ பால் வீசினால் பிரீ ஹிட் என்பது போன்ற புதிய விதிமுறைகளின் வருகையால் கிரிக்கெட்டில் பவுலர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட்டில் தற்போது நிலவும் விதிமுறைகள் அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர் ஒரு லட்சம் ரன்களை விளாசி இருப்பார் என பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

sachin 2

இது பற்றி தனது யூட்யூப் பக்கத்தில் இந்தியாவின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியுடன் உரையாடிய வீடியோவில் அவர், இப்போதெல்லாம் “2 புதிய பந்துகள் அளிக்கப்படுகிறது. ரூல்ஸ் மிகவும் கடுமையாக மாற்றப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் பேட்டர்களுக்கு அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. மேலும் தற்போது பேட்டர்கள் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 3 டிஆர்எஸ் ரிவியூ வழங்கப்பட்டுள்ளது. சச்சின் விளையாடும் போது இந்த 3 ரெவியூ கொடுக்கப்பட்டிருந்தால் அவர் ஒரு லட்சம் ரன்களை அடித்திருப்பார். நான் அவருக்காக வருந்துகிறேன்.

- Advertisement -

ஏனெனில் ஆரம்ப காலத்தில் சச்சின் டெண்டுல்கர் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் போன்ற கடினமான பவுலர்களை எதிர்கொண்டு பின் ஷேன் வார்னே, பிரெட் லீ, சோயப் அக்தர் போன்ற பவுலர்களை எதிர்கொண்டு இறுதியில் நவீனகால வேகப்பந்து வீச்சாளர்களை சந்தித்தார். அதனால்தான் அவரை ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என நான் அழைக்கிறேன்”

sachin 1

ஒரு இன்னிங்ஸ்சுக்கு 2 புதிய பந்துகள், 3 ரெவியூ போன்ற பல்வேறு வகையான விதிமுறைகள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மாறிவிட்டதாக ஐசிசியை சாடியுள்ளார். மேலும் இதுபோன்ற விதிமுறைகள் அப்போது இருந்திருந்தால் சச்சின் இன்னும் பல ஆயிரம் ரன்களை அடித்து இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

- Advertisement -

தரமான சச்சின்:
அவர் கூறுவது போல சச்சின் டெண்டுல்கர் எத்தனையோ முறை 90 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அம்பயர்களால் தவறான அவுட் கொடுக்கப்பட்டுள்ளார். ஆனாலும் கூட இறுதியில் அவர் 100 சதங்களை அடித்து உலக சாதனை படைத்தார். தற்போதும் கூட சர்வதேச கிரிக்கெட்டில் 30000 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரராக சச்சின் உலக சாதனை படைத்துள்ளார். ஒருவேளை அப்போது ரிவியூ இருந்திருந்தால் அவர் 150 சதங்களை அடித்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிங்க : சென்னையில் டீம் மீட்டிங்கில் கலந்துகொண்ட தோனி. மெகா ஏலத்தில் எடுக்கப்போகும் – வீரர்கள் யார்?

சமம் இல்லை:
“இப்போதைய கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒன்றாக உள்ளது. முன்பெல்லாம் தலையை தொட்டுக்கொண்டு செல்லக்கூடிய பவுன்சர்களை பேட்ஸ்மேன்கள் கூட விரும்பினார்கள். நீங்கள் கிரிக்கெட்டை சமன்படுத்த விரும்பினால் ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு மேல் வீசக்கூடாது என்ற விதிமுறையை நீக்குங்கள். அப்போதுதான் போட்டிக்கு விருவிருப்பு உண்டாகும்” என கூறியுள்ள சோயப் அக்தர் தற்போதைய கிரிக்கெட்டில் போட்டிகள் பேட் மற்றும் பந்து ஆகிய இரண்டும் சமஅளவில் போட்டி இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement